செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் பலன்கள்: நம் நாட்டில் பெண் குழந்தைகள் வீட்டின் ஐஸ்வர்யமாக, செல்வமாக பார்க்கப்ப்டுகிறார்கள். இந்த காலத்தில் வீட்டின் செல்ல மகள்களுக்கு நல்ல கல்வியை வழங்குவது மிகவும் முக்கியமாகும். வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் பொதுமக்களின் நிலையை மோசமாக்கியுள்ளது. ஆனால் அவர்களின் எதிர்காலத்திற்கான நிதி திட்டமிடல் சரியான நேரத்தில் மற்றும் சரியான முறையில் செய்யப்பட்டால், உங்கள் மகள் வளர்வதற்குள், நீங்கள் அவருக்காக ஒரு பெரிய தொகையை சேர்த்து வைக்கலாம். இதற்கு இது குறித்த விழிப்புணர்வும் போதுமான திட்டமிடலும் இருந்தால் போதும்.
மோடி அரசு, நம் வீட்டு செல்ல மகள்களுக்கான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவற்றில் ஒன்று 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' என அழைக்கபப்டும் 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்'. இதில் முதலீடு செய்தால் உங்கள் மகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்
இந்தத் திட்டம் நாட்டின் மகள்களுக்காக அரசால் நடத்தப்படுகிறது. இதில் முதலீடு செய்வதன் மூலம், கூட்டு வட்டியின் பலனைப் பெறுவீர்கள். இதன் காரணமாக குறுகிய காலத்தில் பணம் சேரத் தொடங்குகிறது. இந்த நேரத்தில், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்களுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 முதலீடு செய்தால், முதிர்வு வரை சுமார் 27 லட்சம் வரை பணம் சேமிக்கலாம்.
இந்த வழியில் நீங்கள் பெரிய தொகையை சேர்க்கலாம்
இந்தத் திட்டத்தில் 15 ஆண்டுகள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். இதன் முதிர்வு காலம் (மெஸ்யூரிட்டி பீரியட்) 21 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்வதன் மூலம், ஒரு வருடத்தில் மொத்தம் ரூ.60,000 முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் 15 மற்றும் 21 ஆண்டுகளுக்கு இடையில் எந்தப் பணத்தையும் முதலீடு செய்ய வேண்டியதில்லை. ஆனால் உங்கள் வைப்புத்தொகையில் 8 சதவிகிதம் வட்டி தொடர்ந்து சேர்க்கப்படும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம்: கால்குலேட்டர்
- இந்த திட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால் வட்டியில் மட்டும் ரூ.17,97,246 வருமானம் கிடைக்கும்.
- இதற்குப் பிறகு, அசல் மற்றும் வட்டித் தொகை இரண்டையும் சேர்த்து, முதிர்வு நேரத்தில் சுமார் ரூ.27 லட்சத்தைப் பெறுவீர்கள்.
இப்போதே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தைத் திறக்கவும்
2023 ஆம் ஆண்டில் உங்கள் மகளின் பெயரில் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் கணக்கைத் திறந்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2044 இல், முதிர்வுத் தொகையைப் பெறுவீர்கள். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி மதிப்பாய்வு காலாண்டு அடிப்படையில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கு கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை ஆன்லைனில் திறக்க என்ன செய்ய வேண்டும்
- சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் திறக்க, ஒருவர் தபால் நிலையத்திற்குச் சென்று SSY ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.
- இதற்கு மகளின் பிறப்புச் சான்றிதழ் அவசியமாகும். மகளின் வயது 10 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.
- பெற்றோரின் அடையாளச் சான்றும் தேவைப்படும். இதில் பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என எந்த ஆவணத்தையும் இணைக்கலாம்.
- முகவரிச் சான்றுக்கான ஆவணங்களையும் பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மின் கட்டணம் அல்லது ரேஷன் கார்டு ஆகியவையும் இதில் செல்லுபடியாகும்.
- வங்கி அல்லது தபால் நிலையத்திலிருந்து உங்கள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு உங்கள் கணக்கு திறக்கப்படும்.
- சுகன்யா கணக்கு துவங்கிய பிறகு, கணக்கு வைத்திருப்பவருக்கு பாஸ்புக்கும் வழங்கப்படுகிறது.
- 2 பெண் குழந்தைகளுக்கு மேல் கணக்கு தொடங்க வேண்டும் என்றால், பிறப்புச் சான்றிதழுடன் பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும்.
மேலும் படிக்க | அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் தொடங்கிய SBI; வாய்ப்பை தவற விடாதீர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ