Singles கவனத்திற்கு... பெங்காலி பெண்களை திருமணம் செய்தால் Rs.40000 பரிசு!

அசாமில் வசிக்கும் பெங்காலி இளம்பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை அரசு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 18, 2020, 04:49 PM IST
Singles கவனத்திற்கு... பெங்காலி பெண்களை திருமணம் செய்தால் Rs.40000 பரிசு! title=

அசாமில் வசிக்கும் பெங்காலி இளம்பெண்களை திருமணம் செய்பவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை அரசு வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்காலி இளம்பெண்களை திருமணம் செய்தவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை அரசு வழங்கி வருகிறது. ஆம், அஸ்ஸாமில் வசிக்கும் பெங்காலி இந்து மணமகள் அல்லது மணமகன், உள்ளூர் (அசாம்) மக்களிடமிருந்து தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.40,000 அரசு மாநியம் அளிக்கப்படுகிறது. மாநில மொழியியல் சிறுபான்மையினர் மேம்பாட்டு வாரியம் முன்மொழியப்பட்ட திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இந்த உதவி வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதன் மூலம் இரு சமூகங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்த இயலும் என அரசு நம்புகிறது. 

இதுகுறித்து வாரியத்தின் தலைவர் அலோக் குமார் கோஷ் கூறுகையில், ஒரு தனி சமூகத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினர் வழக்கமாக சொத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதனுடன், அவர்கள் சமூக விலக்கையும் எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற தம்பதிகள் கடை, அழகு நிலையம் திறப்பதோடு, விவசாயத்திற்கும் உதவி வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் முயற்சி.

இந்த முன்மொழிவு இரண்டு நாட்களுக்கு முன்பு மாநில அரசிடம் முன்வைக்கப்பட்டது. இதற்காக, ஒரு வலைத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது, அங்கு பெங்காலி-அசாமி இந்து தம்பதிகள் தங்கள் தகவல்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். 

இந்த முயற்சி செழிப்புக்கு வழிவகுக்கும் என்று கோஷ் கூறினாலும், அனைத்து அசாம் சிறுபான்மை மாணவர் சங்கமும் அதைப் பிளவுபடுத்துவதாகக் கூறி, மதத்தை துருவப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

Trending News