Senior Citizens Saving Scheme: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. ஒவ்வொரு வயதிலும் மனிதர்களுக்கு ஒவ்வொரு விதமான தேவை இருக்கும். எனினும் வயதானவுடன் நாம் பணத்தை ஈட்டுவது மிகவும் கடினமான ஒரு பணியாகிவிடும். இளமையிலேயே பணி ஓய்விற்கு பிறகான காலத்திற்காக சேமித்து வைப்பது நல்லது.
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்களை பொறுத்தவரை அவர்கள் தங்களிடம் உள்ள தொகையை பாதுகாப்பான இடங்களிலேயே சேமிக்க முன் வருகிறார்கள். உத்திரவாதமான வட்டியும் பாதுகாப்பும் கிடைக்கக்கூடிய ஃபிக்ஸ்ட் டெபாசிட்களில் பெரும்பாலும் மூத்த குடிமக்கள் (Senior Citizens) தங்களிடம் உள்ள தொகையை முதலீடு செய்கிறார்கள். எனினும் இந்த முதலீட்டை நீண்ட கால முதலீடாக செய்பவர்கள், ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு (Fixed Deposit) பதிலாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இந்த தொகையை முதலீடு செய்யலாம். வருமானத்தை பொருத்தவரை இந்த திட்டம் பிக்ஸ்டு டெபாசிட்டை விட சிறந்ததாக இருக்கும்.
SCSS: வட்டி விகிதம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது 8.2% வட்டி கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் நன்மைகள் பற்றியும், பெரிய வங்கிகளில் ஐந்து ஆண்டுகளுக்கான பிக்ஸட் டெபாசிட்களில் கிடைக்கும் வட்டி விகிதம் பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
Senior Citizens Saving Scheme: இதில் எவ்வளவு தொகை முதலீடு செய்யலாம்
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச வரம்பு 30 லட்சம் ரூபாயாகும். இந்த திட்டத்தில் ஆயிரம் ரூபாய் மடங்குகளாக தொகை முதலீடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்
எனினும் முதலீட்டாளர் விரும்பினால் டெபாசிட் தொகையின் முதிர்விற்கு பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு திட்டத்தை நீட்டிக்கலாம். திட்ட முதிர்விற்கு பிறகு ஒரு ஆண்டுக்குள் இதை செய்ய வேண்டும். நீட்டிக்கப்பட்ட கால அளவுக்கான வட்டி, திட்ட முதிர்வின் போது எந்த விகிதம் இருந்ததோ அந்த விகிதத்தில் அளிக்கப்படும்.
மேலும் படிக்க | குழந்தைகளுக்கான புதிய பாலிசியை அறிமுகம் செய்தது LIC: முழு விவரம் இதோ
SCSS: முதலீட்டில் கிடைக்கும் வருமான விவரங்கள்
இந்தத் திட்டத்தில்
- ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1,41,000 ரூபாய் கிடைக்கும்
- ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2,82,000 ரூபாய் கிடைக்கும்
- ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 7,05,000 ரூபாய் கிடைக்கும்
- ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 14,10,000 ரூபாய் கிடைக்கும்
- ரூ.20 லட்சத்தை முதலீடி செய்தால் 28,20,000 ரூபாய் கிடைக்கும்
- ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் 42,30,000 ரூபாய் கிடைக்கும்.
SCSS: மூத்த குடிமக்களுக்கு 5 வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு வங்கிகளில் எவ்வளவு வட்டி கிடைக்கும்?
- எஸ்பிஐ (SBI): 7.25%
- பிஎன்பி (PNB): 7:00%
- எச்டிஎஃப்சி (HDFC): 7:50%
- ஐசிஐசிஐ (ICICI): 7:50%
- ஆக்சிஸ் வங்கி (Axis Bank): 7:60%
SCSS: பாதுகாப்பு பணிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு வயது வரம்பில் தளர்வு
60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டலாம். விஆர்எஸ் வாங்கும் சிவில் துறை அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களுக்கு சில நிபந்தனைகளுடன் வயது தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த SCSS கணக்கை தனியாகவோ அல்லது மனைவியுடன் கூட்டுக் கணக்காகவோ தொடங்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வருமான வரி சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கின் பலன் கிடைக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ