இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனிடம் டிக்கெட்டுகளை ரீஃபண்ட் பெற முயற்சிக்கிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள். உண்மையில், ஐஆர்சிடிசியின் பெயரில் சில போலி கஸ்டமர் கேர் நம்பர் மற்றும் மெசேஜ் வைரலாகி வருகின்றன. அதன்படி இந்த மோசடி வலையில் விழ வேண்டாம் என ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது.
ஐஆர்சிடிசி கூறியது என்ன: ஐஆர்சிடிசி தனது அதிகாரவபூர்வ சமூக ஊடகங்களில் கூறியதாவது., ரீஃபண்ட் பணத்தைத் திரும்பத் தருவதாகக் கூறி போலி கஸ்டமர் கேர் நம்பருடன் சமூக ஊடகங்களில் சில தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இதுபோன்ற தீங்கிழைக்கும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், அதிகாரப்பூர்வ எண்களில் ஐஆர்சிடிசி வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஐஆர்சிடிசி இன் அதிகாரப்பூர்வ எண்கள்- 07556610661, 07554090600 மற்றும் மின்னஞ்சல் ஐடி care@irctc.co.in ஆகும்.
மேலும் படிக்க | ராமாயண பக்தி சுற்றுலா ரயில் துவக்கம்: 65000 கட்டணம்: 18 நாட்கள் பயணம்
On the pretext of refund, some fraudulent text messages are circulating on social media with fake customer care nos. It is requested to be careful of such malicious messages and contact IRCTC Customer Care on official nos. 07556610661, 07554090600 care@irctc.co.in
— IRCTC (@IRCTCofficial) June 14, 2022
தொடர்ந்து இரண்டாவது நாளாக எச்சரிக்கை: ஐஆர்சிடிசி தொடர்ந்து இரண்டாவது நாளாக பயணிகளுக்கு இது தொடர்பாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக ஜூன் 13 ஆம் தேதி, ஐஆர்சிடிசி போலி செய்தியைப் பற்றி குறிப்பிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரீஃபண்ட் விதிகள்
முன்பதிவு வகுப்பு மற்றும் ரத்து செய்த நேரத்திற்கு ஏற்ப ரத்து கட்டணம் மாறுபடும், உறுதிப்படுத்தப்பட்ட, அதாவது கன்பர்ம் டிக்கெட்டை ரத்து செய்த பிறகு ரீபண்ட் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய முழுமையான தகவல்களை erail.in வலைதளத்தில் காணலாம். Erail.in முகப்புப் பக்கத்தில் பணத்தை ரீபண்ட் பெறுவதற்கான முழுமையான வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.
கேன்ஸல் நேரத்தில் கவனம்
ரயில்வே விதிகளின்படி, உங்களிடம் உறுதிப்படுத்தப்பட்ட, அதாவது கன்பர்ம் டிக்கெட் இருந்தால், ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட அந்த டிக்கெட்டை (Railway Ticket) ரத்து செய்யும், நீங்கள் ரத்து செய்யும் நேரத்திற்கு ஏற்ப ரீபண்ட் கிடைக்கும். ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இருந்தால், ரீபண்ட் கிடைக்காது. ரயில் புறப்பட 4 மணி நேரத்திற்கு மேல் இருந்தால், நீங்கள் 50% வரை திரும்பப் பெறலாம். பண இழப்பை தடுக்க டிக்கெட்டை ரத்து செய்யும் நேரத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | IRCTCயின் ஸ்ரீ ராமாயண் யாத்ரா ரயிலுக்கு அமோக வரவேற்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR