PPFல் முதலீடு செய்தீர்களா? உங்களுக்கான பெரிய அப்டேட் இதோ

PPF என்பது பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் மற்றும் நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது சிறந்த திட்டமாகும். அத்தகைய PPF திட்டம் தொடர்பான சில முக்கியமான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 15, 2023, 06:37 AM IST
  • நீங்கள் நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால் பொது வருங்கால வைப்பு நிதியை சிறந்த வழி என்று கூறலாம்.
  • PPF ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை செலுத்துகிறது.
  • PPF இல் முதலீடு செய்வதற்கு முன் இந்தக் தகவல்களை கவனியுங்கள்.
PPFல் முதலீடு செய்தீர்களா? உங்களுக்கான பெரிய அப்டேட் இதோ title=

நம்பகமான நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்ய நீங்கள் நினைத்தால், மத்திய அரசின் லட்சிய திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) சிறந்த திட்டமாகும். நீங்கள் ஏற்கனவே PPF இல் முதலீடு செய்திருந்தால் அல்லது PPF இல் முதலீடு செய்ய நினைத்திருந்தால் உங்களுக்கான முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு எவ்வளவு முதலீடு செய்யலாம்?
பொது வருங்கால வைப்பு நிதி-பிபிஎஃப் திட்டத்தில் மக்கள் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம். மேலும், இந்த முதலீட்டில் நீங்கள் படிவம் 80C-ன் கீழ் வரிவிலக்கு பெறலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி, டிஏ அரியர் கிடைக்காது!!

வட்டி விகிதம் என்ன?
தற்போது மத்திய அரசு PPFக்கு ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை செலுத்தி வருகிறது.

மெச்சூரிட்டி காலம்
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, பிபிஎஃப் ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். எனவே வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு புதுப்பித்தலிலும் முதிர்வு முடிந்த பிறகு 5 ஆண்டுகளுக்கு கணக்கைத் தொடரலாம், கூடுதலாக, டெபாசிட் செய்யலாம் அல்லது செய்யாமல் இருக்கலாம்.

PPF இல் முதலீடு செய்வதற்கு முன் இந்த விவரங்களை கவனியுங்கள்:
>> நீண்ட கால திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு PPF ஒரு நல்ல தேர்வாகும், குறுகிய கால முதலீட்டிற்கு அல்ல.
>> இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன், நீங்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்களா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்ய வேண்டும்.

வைப்புத் தவணைகள்
ஒருவர் வருடத்திற்கு ஒரு தவணையாக அல்லது ஒரு வருடத்தில் அதிகபட்சம் 12 தவணைகள் வரை PPF கணக்கில் பணத்தை முதலீடு செய்யலாம்.

எனவே, உங்கள் நிதி இலக்குகளை சந்திக்கும் நீண்ட கால ஓய்வூதிய முதலீட்டைப் பற்றி யோசிக்கிறீர்களா? பொது வருங்கால வைப்பு நிதியின் மேற்கூறிய பலன்களைப் பார்த்து, புத்திசாலித்தனமான முடிவை எடுங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், PPF இல் முதலீடு செய்யவும்.

மேலும் படிக்க | ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 1.80 லட்சம் வழங்கும் அரசு? உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News