அனைத்துலக மகளிர் தினம் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8-ம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி:- |
மகளிர் தினத்தில் பெண்களின் ஆற்றலுக்கு நாம் தலை வணங்குவோம். நமது பெண்களின் ஆற்றல், சாதனைகளை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதன் மூலம் புதிய இந்தியாவை உருவாக்க முடியும். பெண்களின் வளர்ச்சியே, நாட்டின் வளர்ச்சி. பெண்களின் முன்மாதிரியான செயல்கள், பல பெண்கள் மனிதகுல வரலாற்றில் ஒரு அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் தலைமுறைகளுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். உங்களை ஊக்குவித்த சில பெண்களை பற்றி எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டு துவக்கத்தில் மரணமடைந்த சட்டீஸ்கரைச் சேர்ந்த 106 வயது குன்வார் பாய், தனது ஆடுகளை விற்று, கழிப்பறை கட்டினார். ஸ்வச் பாரத் திட்டத்திற்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. அவரது செய்கை என்னை மிகவும் ஆழமாக ஈர்த்தது. நான் சட்டீஸ்கர் சென்ற போது அவரின் ஆசிகளை பெற்றது எப்போதும் மறக்க முடியாததாக இருக்கும். தூய்மை இந்தியா என்ற மகாத்மாவின் கனவை நனவாக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் குன்வர் பாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
|
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- |
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்" என்ற மகாகவி பாரதியார் அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, பெண்களின்சிறப்பினையும், மாண்பினையும் போற்றும் வகையிலும், சமுதாய வளர்ச்சியில் பெண்களின் |
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்:- |
|
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:- |
நிர்பயா நிதியை முழுமையாக செலவிடவும், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கவும் திமுக தொடர்ந்து போராடும்.
|
பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன்:- |
நாட்டில் மகளிர் முன்னேறி, நாடு முன்னேற வேண்டும் என்றும், அனைத்து வீடுகளிலும் மகளிரின் மகிழ்ச்சி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
|
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:- |
பெண்களின் மாண்பைக் காக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என மகளிர் தினத்தில் சூளுரைப்போம் என வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். |
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- |
மகளிர் சுதந்திரமாக, மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு, பாதுகாப்பாக, நல்வாழ்க்கை வாழ இனி வரும் காலம் வழி ஏற்படுத்திக்கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு என மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். |