20 ஆண்டுகளுக்கு பின் ‘MISS UNIVERSE’ பட்டம் வென்ற இந்திய பெண்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 11:07 AM IST
20 ஆண்டுகளுக்கு பின் ‘MISS UNIVERSE’ பட்டம் வென்ற இந்திய பெண் title=

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.

இந்த நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற 21 வயது இளம்பெண் ஹர்னாஸ் கவுர் (Harnaaz Sandhu) பிரபஞ்ச அழகியாக (Miss Universe 2021) தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார்.

ALSO READ | Watch: அரைகுறை ஆடையில் ஆபாசமாய் நடனமாடிய பிரபல நடிகை...!

70வது பிரபஞ்ச அழகி போட்டி டிசம்பர் 12ம் தேதி இஸ்ரேலில் நடந்தது. இதில் ஹர்னாஸ் 79 நாடுகளின் அழகிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச்சென்றார். மிஸ் யுனிவர்ஸின் ரன்னர் அப் பராகுவே நதியா ஃபெரீரா மற்றும் இரண்டாவது ரன்னர் அப் மிஸ் தென் ஆப்ரிக்கா லலேலா மஸ்வானே. மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் நடுவராக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் இந்தியாவுக்கான நடுவர் குழுவில் ஒருவராக இருந்தார்.

 

 

சண்டிகர் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்தியா சார்பில் லாரா தத்தா 2000-ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியப் பெண் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | முன்னால் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென் வெளியிட்ட வீடியோ!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News