மும்பை மத்திய டெர்மினஸ், தாதர் டெர்மினஸ், பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் தானே மற்றும் பால்கர் நிலையங்களில் சூரிய சக்தி கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன..!
மேற்கு ரயில்வே (Western Railway) தனது வலையமைப்பின் 75 நிலையங்களில் சூரிய மின்சக்தியை (solar power) நிறுவுவதன் மூலம் சுமார் 3 கோடி ரூபாய் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த வசதியை இன்னும் பல நிலையங்களில் தொடங்குவதற்கான திட்டத்தை ரயில்வே இப்போது தயாரித்து வருகிறது.
மேற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுமித் தாக்கூர் கூறுகையில், கூரை சோலார் ஆலைகள் 8.67 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன, இதன் மூலம் இந்த ஆண்டு கணிசமான மின்சார சேமிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர, 2030-க்குள் 'நெட் ஜீரோ கார்பன் எமிசன் ரயில்வே' இலக்கை அடையவும் இது உதவுகிறது.
Rooftop Solar Panels have been installed at 75 stations over Western Rly
The use of solar power will accelerate the Railway's mission to achieve the goal of becoming “Net Zero Carbon Emission Railway” before 2030. #solarenergy #renewableenergy #solarpower #greenenergy pic.twitter.com/ouKlkKGVvz
— Western Railway (@WesternRly) September 2, 2020
ALSO READ | No Mask No Ride: பயணதிற்கு முன் மாஸ்க் செல்பி சமர்ப்பிக்க Uber வலியுறுத்தல்!
மும்பையில் 22 நிலையங்கள், ரத்லத்தில் 34 நிலையங்கள், ராஜ்கோட்டில் எட்டு நிலையங்கள், வதோதராவில் ஆறு நிலையங்களில் சூரிய ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, அகமதாபாத் மற்றும் பாவ்நகரிலும் இது நடப்படுகிறது.
மும்பை பிரிவில் (Mumbai Division) உள்ள கூரைகளில் சூரிய ஆலை (Rooftop Solar Plant) சர்ச்ச்கேட், மும்பை மத்திய டெர்மினஸ், தாதர் டெர்மினஸ், பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் தானே மற்றும் பால்கர் போன்ற நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளது.
அனைத்து எரிசக்தி தேவைகளையும் பூர்த்தி செய்து 2030 ஆம் ஆண்டளவில் இந்திய ரயில்வே 33 பில்லியன் யூனிட்டுகளுக்கு சூரியசக்தியை உற்பத்தி செய்ய தயாராக உள்ளது என்று சுமித் தாக்கூர் கூறினார். இந்த இலக்கை அடைய, இந்திய ரயில்வே தனது காலியாக உள்ள 51,000 ஹெக்டேர் நிலத்தில் 2030 க்குள் 20 ஜிகாவாட் சூரிய ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.