Indian Railways Latest Update: ஏப்ரல் மாதம் வந்துவிட்டது. பள்ளி, கல்லூரிகளில் விரைவில் ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அடுத்த இரண்டு மாதங்கள் தொடர் விடுமுறைகள் வர உள்ளன. இந்த கோடை விடுமுறைக காலத்தில் சொந்த ஊருக்கு செல்லுதல், சுற்றுலாவுக்கு செல்லுதல், உறவினர் வீட்டுக்கு செல்லுதல் என பல்வேறு பொதுமக்கள் இந்த காலகட்டத்தில் பயணப்பட இருப்பார்கள்.
நீண்ட ஓய்வு கிடைக்கும் இந்த நாள்களுக்காக பலரும், மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்வார்கள். சில பேர் அலுவலகத்தில், விடுமுறைக்கு அனுமதிக்கு காத்திருந்து அதற்கு தகுந்தவாறு தங்களை திட்டங்களை வகுத்துக்கொள்வார்கள். பொதுமக்கள் அதிக பயணிக்கும் காலகட்டம் இது என்பதால் அரசு மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களும் அவர்களுக்கு கூடுதல் சேவையை வழங்க தயார் நிலையில் இருக்கும் எந்பது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும் படிக்க | இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது மிக எளிது... IRCTC-இன் புது வசதி!
அந்த வகையில், ரயில்வே துறையும், இந்த விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க பல்வேறு திட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோருக்கு ரயில்தான் பயணங்களுக்கு ஏதுவானதாகவும், பொருளாதாரத்திற்கு ஏற்றவாறும் இருக்கிறது. இதனால்தான், மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த காலகட்டத்தில் ரயில்களில் பயனிப்பதை நீங்கள் காணமுடியும்.
இந்நிலையில், இந்த கோடை சீசனில் பயணிகளின் வசதிக்காகவும், கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரயில்களை இந்தியன் ரயில்வே இயக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் இந்த காலகட்டத்தில் மட்டும் 4,010 பயணங்களை (Trips) மேற்கொள்ளும். இந்தத் தகவலை ரயில்வே அமைச்சகம் நேற்று (ஏப். 11) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய இடங்களை ரயில் பாதைகள் மூலம் இணைக்க சிறப்பு ரயில்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ரயில்வே மற்றும் தெற்கு மத்திய ரயில்வே முறையே அதிகபட்சமாக 69 மற்றும் 48 சிறப்பு ரயில்களையும், மேற்கு ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வே முறையே 40 மற்றும் 20 சிறப்பு ரயில்களையும் அறிவித்துள்ளது.
கிழக்கு மத்திய ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே போன்ற மண்டலங்கள் தலா 10 சிறப்பு ரயில்களையும், வட மேற்கு ரயில்வே 16 ரயில்களையும் அறிவித்துள்ளது. கோடை சீசனில் வழக்கமாக ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், மேலும் கூட்ட நெரிசலைக் குறைத்து பயணத்தை எளிதாக்குவதே சிறப்பு ரயிலின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | திருமணத்தில் இவ்வளவு சட்டங்கள் உள்ளதா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ