இந்திய ரயில்வேயின் வந்தே பாரத் ரயில்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள ஓர் ரயில் சேவை. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரயில் தற்போது 46 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், சென்னைக்கு மற்றொரு பரிசாக சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை மிக விரைவில் கிடைக்க போகிறது.
சென்னை-திருநெல்வேலி, டெல்லி-சண்டிகர், லக்னோ-பிரயாக்ராஜ் மற்றும் குவாலியர்-போபால் உள்ளிட்ட பிஸியான வழித்தடங்களில்,, எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலுக்கு நான்கு புதிய வழித்தடங்களை இந்திய ரயில்வே தொடங்க உள்ளது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த 4 வந்தே பாரத் ரயில்கள் புதிதாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் புதிய ரயில் வழித்தடங்கள்
1. சென்னை-திருப்பதி அல்லது சென்னை-விஜயவாடா வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்கும் திட்டம் இருந்தது. ஆனால், தற்போது சென்னை-திருநெல்வேலி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லி-சண்டிகர் வழித்தடத்தில் சதாப்தி உட்பட பல ரயில்கள் உள்ளன. இந்த பாதையில் உள்ள பாரிய தேவையை பூர்த்தி செய்ய புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கப்படும். லக்னோ-பிரயாக்ராஜ் வந்தே பாரத் இணைந்த பிறகு, உத்தரபிரதேச மாநிலத்தில் மூன்று அரை-அதிவேக ரயில்கள் இயக்கப்படும்.
3. குவாலியருக்கு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன், குவாலியர்-போபால் வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்த ரயில்வே முடிவு செய்தது.
மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: ரயில் தாமதமானால் ரீஃபண்ட் கிடைக்கும்..இதுதான் விதி
சென்னை-நெல்லை வந்தே பாரத்
சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயிலுக்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது. இது சுமார் 622 கிமீ தூரம் கொண்ட வழித்தடம் ஆகும். இந்த நீண்ட தூர பயணம் ஆறு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சென்னை - நெல்லை வழித்தடத்தில் என்ன மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட உள்ளன என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும், வி.ஐ.பி. பெட்டியில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை கட்டணம் இருக்கலாம் எனவும், மற்ற பெட்டிகளில் பயணம் செய்ய தனிநபர் ஒருவருக்கு ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை வசூலிக்கப்படலாம் என தகவல்கள் கசிந்துள்ளன.
இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, அதிகபட்சம் எட்டு பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலே இந்த புதிய வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளன. தேவை அதிகம் இருந்தால் மட்டும் 16 பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மதியம் 2 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.
வந்தே பாரத் ரயில் கட்டண குறைப்பு
வந்தே பாரத் ரயிலுக்கு நாட்டின் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மிகுந்த அதிக வரவேற்பு இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் வரவேற்பே இல்லாத நிலையும் இருக்கின்றது. குறிப்பிட்ட சில பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் ரயில்கள் அதிக காலியான இருக்கைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக வரவேற்புக் குறைந்துக் காணப்படும் வழித்தடங்களில் ரயில் கட்டணத்தைக் குறைக்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க | ரயில் ஏசி இருக்கை டிக்கெட் கட்டண குறைப்பு! ஆனால் சில நிபந்தனைகள் உண்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ