உங்கள் வீட்டில் இருக்கும் மூத்த குடிமக்களுடன் நீங்கள் ஆன்மீக பயணம் செல்ல பிளானிங் செய்கிறீர்களா? அப்போ உங்களுக்கு இந்த தகவல் கட்டாயம் பலன் தரும். தென்னிந்தியாவில் கேரளாவிற்கு அருகில் உள்ள அனைத்து புகழ்பெற்ற கோவில்களையும் உள்ளடக்கிய அற்புதமான சுற்றுலா பேக்கேஜை IRCTC டூரிசம் அறிவித்துள்ளது. தென்னிந்திய டெம்பிள் ரன் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த பேக்கேஜ் கேரளாவை ஒட்டியுள்ள அனைத்து பிரபலமான கோவில்களையும் உள்ளடக்கும். ஆறு இரவும் ஏழு பகல்களும் கொண்ட இந்த பயணத்தில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் திருவனந்தபுரம் செல்லலாம். இந்த விமானப் பேக்கேஜின் விலை ரூ. 32,250 முதல் தொடங்குகிறது. இப்போது ஐஆர்சிடிசி சுற்றுலா தென்னிந்திய டெம்பிள் ரன் பேக்கேஜ் பற்றிய முழு விவரங்களைப் பார்ப்போம் .
பேக்கேஜ் விவரங்கள் இவை..
* பேக்கேஜ் பெயர்: தென்னிந்திய டெம்பிள் ரன் (SHA23)
* பேக்கேஜ் காலம்: ஆறு இரவுகள், ஏழு நாட்கள்
* பயண வழிகள்: ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம்.
* பயண தேதிகள்: 2023, நவம்பர் 1
* எங்கெல்லாம் செல்லலாம்: கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம், திருச்சி, திருவனந்தபுரம்
மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு பொன்னான வாய்ப்பு தந்த ரயில்வே.. இதோ முழு தகவல்
பயணத்தின் முழு விவரம்:
நாள் 1 (ஹைதராபாத் - திருவனந்தபுரம்): ஹைதராபாத்தில் இருந்து காலை விமானம் புறப்படும். திருவனந்தபுரம் ஹோட்டலில் செக் இன் செய்து காலை உணவு வழங்கப்படும். பின்னர் நேப்பியர் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவீர்கள். மதியம் பூவார் தீவு மற்றும் மாலை அஜிமலா சிவன் கோவிலுக்கு செல்வீர்கள். திருவனந்தபுரத்தில் இரவு தங்குதல்.
நாள் 2 (திருவனந்தபுரம் - கன்னியாகுமரி): ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயிலுக்கு அதிகாலை தரிசனம். பின்னர் கன்னியாகுமரி சென்றடைவீரகள். சூரியன் மறையும் இடத்தைப் பார்வையிட்டு, கன்னியாகுமரியில் இரவு தங்குதல்.
நாள் 3 (கன்னியாகுமரி - ராமேஸ்வரம்): காலை உணவுக்குப் பிறகு ராக் மெமோரியலுக்குச் செல்வீர்கள். பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டு இரவு அங்கு ஹோட்டலில் தங்குவீர்கள்.
நாள் 4 (ராமேஸ்வரம்): ஹோட்டலில் காலை உணவுக்குப் பிறகு ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியின் உள்ளூர் கோயில்களைப் பார்வையிடவீரகள். (ராமேஸ்வரத்திற்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படுவதில்லை, அனைத்து உள்ளூர் கோயில்களுக்கும் உங்கள் சொந்த செலவில் உள்ளூர் போக்குவரத்து மூலம் செல்ல வேண்டும்). இரவு ராமேஸ்வரத்தில் தங்குவீர்கள்.
நாள் 5 (ராமேஸ்வரம் - திருச்சி): காலை உணவுக்குப் பிறகு.. அப்துல் கலாம் நினைவிடத்தைப் பார்வையிட அழைத்து செல்லப்படுவீர்கள். பின்னர் தஞ்சாவூருக்கு புறப்பட்டுச் சென்று அங்கு உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்குச் அழைத்து செல்லப்படுவீர்கள். பின்னர் மீண்டும் திருச்சியில் இரவு தங்குவீர்கள்.
நாள் 6 (திருச்சி - மதுரை): காலை உணவுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் அழைத்து செல்லப்படுவீர்கள்.. அதன் பிறகு மதுரைக்கு புறப்படுவார்கள், பயணம் மூன்று மணி நேரம் ஆகும். இரவு மதுரையிலேயே தங்குவீர்கள்.
நாள் 7 (மதுரை): காலை உணவுக்குப் பிறகு மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் அழைத்து செல்லப்படுவீர்கள். பின்னர் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் இறக்கிவிடப்படுவீர்கள். மதியம் விமானத்தில் ஏறி ஹைதராபாத் திரும்ப வேண்டும். இத்துடன் பயணம் முடிவடைகிறது.
பேக்கேஜ் விலை பின்வருமாறு..
ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஹோட்டலில் ஒரு அறை மட்டும் வேண்டுமானால், மொத்த பேக்கேஜ் மதிப்பு ரூ. 50,350 ஆக இருக்கும். ஹோட்டலில் இரண்டு பேர் தங்க அறை வேண்டுமானால் அதற்கு ரூ. 37,650 செலுத்த வேண்டும். டிரிபிள் ஷேரிங் ரூ. 35,950 வசூலிக்கப்படும். 5 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தனி படுக்கை தேவை ஆனால் ரூ. 31,500, படுக்கை தேவையில்லை என்றால் ரூ. 27,750 வசூலிக்கப்படும். இரண்டு முதல் நான்கு வயது குழந்தைகளுக்கு ரூ. 20,350 வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டுதாரர்களுக்கு அடிச்சது மெகா ஜாக்பாட்! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ