PM-WANI: இந்திய ரயில்வே மேம்பட்ட இலவச Wi-Fi வசதி

இந்திய ரயில்வேயை மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேகம் முதல் பாதுகாப்பு மற்றும் வசதி வரை, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 11, 2022, 09:16 PM IST
PM-WANI: இந்திய ரயில்வே மேம்பட்ட இலவச Wi-Fi வசதி title=

இந்தியாவின் போக்குவரத்திற்கான லைப் லைனாக கருதப்படும் இந்தியாவின் போக்குவரத்திற்கான லைப் லைனாக கருதப்படும் இந்திய ரயில்வேயை மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேகம் முதல் பாதுகாப்பு மற்றும் வசதி வரை, சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

இந்நிலையில், ஏற்கனவே இலவச Wi-Fi வசதி இருந்த நிலையில், அவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய இரயில் நிலையங்களில் முன்பை விட இப்போது பயணிகள் இலவச வைஃபை வசதியை சிறந்த முறையில் பயன்படுத்த முடியும்.

புதிய சேவை தொடங்கப்பட்டது

உண்மையில், ரயில் நிலையங்களில் இலவச வைஃபையை உறுதி செய்வதற்காக (Prime Minister Wi-Fi Access Network Interface - PM- WANI) திட்டத்தின் கீழ் ரெயில்டெல் பொது வைஃபை சேவையைத் தொடங்கியுள்ளது. தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் இது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இது மற்ற ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படும்.

மேலும் படிக்க | Indian Railways: பயணத்தின் போது கண்டிப்பாக லோயர் பர்த் கிடைக்க IRCTC சொன்ன வழி 

இந்த தகவலை ரெயில்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 மாநிலங்களில் உள்ள 100 ரயில் நிலையங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதில் 71 நிலையங்கள் ஏ1 வகையைச் சேர்ந்தவை. ஏ பிரிவில் 29 ரயில் நிலையங்கள் உள்ளன.

இதை பயன்படுத்துவது எப்படி 

இப்போது இந்திய ரயில்வேயின் இந்த வசதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்ற கேள்வி அனைவருக்கு எழும். இந்த RailTel இன் Wi-Fi நெட்வொர்க்கை Android பயனர்கள் மொபைல் செயலான Wi-DOT ஐப் பயன்படுத்தி அணுகலாம். இந்த செயலி Google Play Store-ல் கிடைக்கிறது. இந்த பயன்பாடு C-DOT உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. இது தவிர, ரயில் நிலையங்களில் ரயில்வயர் சர்வீஸ் செட் ஐடெண்டிபயர் என்பதைத் தேர்ந்தெடுத்து இந்த Wi-Fi இணைப்பை பயன்படுத்தலாம்.

அனைத்து நிலையங்களிலும் வசதிகள் கிடைக்கும்

இந்திய ரயில்வேயின் அனைத்து 6,102 ரயில் நிலையங்களுக்கும் PM- WANI சேவை ஜூன் 2022 இறுதிக்குள் நீட்டிக்கப்படும். ஜூன் 10ஆம் தேதிக்குள் 1,000 ரயில் நிலையங்களிலும், ஜூன் 20ஆம் தேதிக்குள் 3,000 ரயில் நிலையங்களிலும் இந்த வசதி தொடங்கப்படும். ஜூன் 30, 2022 வரை அனைத்து 6,102 நிலையங்களிலும் இந்தச் சேவை கிடைக்கும்.

இந்திய ரயில்வேயின் PM-WANI திட்டம் 

பொது மக்களிடையே பிராட்பேண்ட் பயன்பாட்டை ஊக்குவிக்க, தொலைத்தொடர்புத் துறை PM-WANI திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அனைத்து பொது இடங்களிலும் Wi-Fi வசதியை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள அனைவரும் இண்டெர்நெட் வசதியை அடைய முடியும்.

மேலும் படிக்க | கூடிய விரைவில் ரயிலில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News