புதுடெல்லி: சனி நீதியின் கடவுள் என்பதால், அவர் நாம் செய்யும் செயல்களின் அடிப்படையில் பலன்களைத் தருகிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களுக்கான பலனை தருவது சனை பகவான் ஆவார். எனவே, ஜோதிட சாஸ்திரத்தில், சனியின் கோபத்தைத் தவிர்ப்பதற்கும், ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து விடுபடவும் கீழ்கண்ட பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும்.
இந்த பழக்கங்கள் சனியின் கோபத்திற்கு காரணமாகிறது
சில பழக்கங்கள் சனிக்குப் பிடிக்காத பழக்கங்கள். சில பழக்கங்கள் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்கும். சனிதேவனுக்கு பிடிக்காத பழக்கங்களை ஒருவர் கடைப்பிடித்தால், பணத்தட்டுப்பாடு, உடல்-மன நோய்கள், கௌரவ இழப்பு போன்ற பிரச்சனைகளை அவர் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். அது மட்டுமல்லாமல், இப்படிப்பட்டவர்கள் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொள்கிறார்கள்.
சில பழக்கங்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். அந்த பழக்கங்களை கடைப்பிடிப்பவர்களிடம் சனி பகவான் எப்போதும் கருணையுடன் நடந்து கொள்வார்.
ALSO READ | 2022-ம் ஆண்டில் ராகு-கேதுவால் இந்த ராசிக்கு கேடு ஏற்பட வாய்ப்பு
ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் உதவுபவர்கள்: ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுபவர்களிடம் சனி பகவான் எப்போதும் கருணை காட்டுகிறார். ஜாதகத்தில் சனி தோஷன் இருப்பவர்கள், ஏழை எளியோருக்கு உதவி செய்தால் மிகப்பெரிய சனி தோஷம் கூட நீங்கி வாழ்க்கையில் பிரச்சனைகள் வராது.
கடின உழைப்பாளிகள்: சனி பகவான் கடின உழைப்பாளிகளை மிகவும் விரும்புகிறார். ஏழரை சனி காலத்திலும் இவர்கள் நல்ல பலன்களைப் பெறுவதற்கு இதுவே காரணம். அதே சமயம், சனி அவர்களுக்கு மற்ற நேரத்தில் கூட தொந்தரவு கொடுப்பதில்லை.
சுத்தமாக வாழ்பவர்கள்: எப்பொழுதும் சுத்தமாக இருப்பவர்களுக்கு சனியின் அருள் எப்போதும் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | இந்த 2 ராசிக்காரர்கள் இன்று எதிலும் கவனம்; நிதானமாக செயல்பட வேண்டும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR