புதுடெல்லி: இந்திய விமானப்படை, குரூப் ‘சி’ சிவிலியன் பதவிகளுக்க்கான ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்ப்பிக்கலாம்.
இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் கீழ், MTS, சமையல்காரர் உட்பட சில பதவிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் IAF இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.
‘வேலைவாய்ப்புச் செய்தி/ ரோஸ்கர் சமாச்சாரி’யில் இந்த விளம்பரம் வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.இறுதித் தேதிக்குப் பிறகும், இந்த ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரும் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்த ஆட்சேர்ப்பு இயக்கத்தின் மூலம், மொத்தம் 21 காலியிடங்கள் நிரப்பப்படும்.
மேலும் படிக்க | ரயில்வேயில் 1659 பேருக்கு வேலைவாய்ப்பு ரெடி
IAF குரூப் C ஆட்சேர்ப்பு 2022 முக்கிய தேதிகள்
விண்ணப்பத்தின் கடைசி தேதி: விளம்பரம் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்
தகுதிகள்
ஏ/சி மெக்கானிக்: அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்திலிருந்து 10வது தேர்ச்சி. ஏர்கிராப்ட் மெக்கானிக் வர்த்தகத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் படிப்பு.
சமையல்காரர் : சான்றிதழ் அல்லது கேட்டரிங் டிப்ளமோவுடன் அங்கீகரிக்கப்பட்ட குழுவிலிருந்து மெட்ரிகுலேஷன்; வேலையில்1 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
தச்சர் - அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து தச்சரின் வர்த்தகத்தில் தொழில்துறை பயிற்சி நிறுவனம் அளித்த சான்றிதழ் இருக்க வேண்டும். அல்லது இந்த பணியில் இருந்த முன்னாள் படைவீரர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை
மேலே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை சரிபார்க்கலாம்.
IAF குரூப் C ஆட்சேர்ப்பு அறிவிப்பு
வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | அக்னிபத் திட்டத்தில் ராணுவம் மற்றும் கடற்படைக்கான ஆட்சேர்ப்பு தொடங்கியது
எப்படி விண்ணப்பிப்பது?
“சமீபத்திய புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு) ஆங்கிலம்/இந்தியில் தட்டச்சு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தில் முறையாக சுய சான்றொப்பம் அளித்திருக்கவ் ஏண்டும். வேறு ஏதேனும் துணை ஆவணங்கள் இருந்தால் அவையும் சுய சான்றளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
சுய முகவரியிடப்பட்ட உறையில் ரூ. 10 மதிப்புள்ள ஸ்டாம்பை ஒட்டி அந்த உறையையும் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். முகவரி ஆங்கிலம் / இந்தியில் தெளிவாக தட்டச்சு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரே விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பித்தால், ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
உறையின் மீது APPLICATION FOR THE POST OF ——– AND CATEGORY——– AGAINST ADVERTISEMENT NO. 05/2022/DR என்று தெளிவாக குறிப்பிட வேண்டும்.
மேலும் படிக்க: 'அக்னிபாத்' திட்டத்தால் பற்றி எரியும் வட மாநிலங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQ