TAX SAVING: வரியை எவ்வாறு சேமிப்பது? வரி செலுத்துவோருக்கு special Tips

வரியை எங்கு சேமிப்பது, அதை எவ்வாறு சேமிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஆனால், வரி சேமிக்க உதவும் பல வழிகள் உள்ளன. அவற்றில் சில...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 22, 2021, 09:49 PM IST
  • வரியை எவ்வாறு சேமிப்பது?
  • வரி செலுத்துபவர்களுக்கு உதவிக் குறிப்புகள்
  • லாப வரி விலக்கு மிகவும் சிறந்த வரி சேமிப்பு வழி
TAX SAVING: வரியை எவ்வாறு சேமிப்பது? வரி செலுத்துவோருக்கு special Tips title=

புதுடெல்லி: வருமான வரி தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் நெருங்கும் நிலையில் வரியைச் சேமிப்பதற்கான உதவிக்குறிப்புகளை தெரிந்துக் கொள்வது உதவியாக இருக்கும். உங்கள் வரிச்சுமையை ஓரளவு குறைக்கும் சில யோசனைகள் இவை… 

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய நேரம் வரும்போதெல்லாம், வரியைச் சேமிப்பதே மிகவும் பதற்றமாக இருக்கும் சூழ்நிலையில், வரியை எப்படி கணக்கிடுவது, எந்த செலவை எந்த வகையில் காட்டுவது என்று பலர் குழப்பமடைகிறார்கள். ஐ.டி.ஆரைத் தாக்கல் செய்யும் போது, வரி விலக்கு அளிக்கப்பட்ட தொகையை விட அதிக செலவு செய்திருப்போம். எனவே அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். இதை கவனத்தில் கொண்டே சம்பளம் வாங்குபவர்கள் ஆண்டுதோறும் தங்கள் வரித் திட்டத்தை முடிவு செய்கிறார்கள். 

ஆனால், வரியை எங்கு சேமிப்பது, அதை எவ்வாறு சேமிப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஆனால், வரி சேமிக்க உதவும் பல வழிகள் உள்ளன. இதுபோன்ற மூன்று விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறோம். இது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது.

Read Also | ஓய்வுக்கு பிறகு வாழ்க்கை நிம்மதியாக இருக்க சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ..!!

லாப வரி விலக்கு
மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் நபர்கள் பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு பிறகு ஒன்றாக லாபத்தை பெறுவார்கள். பெரும்பாலானவர்கள், பங்குகள் (Stock Market) அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Funds) முதலீடு செய்கிறார்கள். அவர்கள் அதிக காலம் முதலீடு செய்யும்போது, அதிக லாபம் கிடைக்கும். ஆனால் வரி சமமாக செலுத்தப்பட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், இங்கே கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். 
தற்போதுள்ள விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு வரி விதிக்கப்படாது. ஆனால், நீண்ட கால முதலீடுகளுக்கு வரி விதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், 3-4 ஆண்டுகளுக்கு ஒரு முறை லாபத்தை பெறுவதற்கு பதிலாக, ஆண்டுதோறும் ஓரளவு லாபத்தை பெறுமாறு முதலீடு செய்யுங்கள், இது உங்களது லாபத்திற்கு வரி செலுத்தும் தொகையை குறைக்கும்.

மூலதன இழப்பிலிருந்து சம்பாதித்து வரியைச் சேமிக்கவும் (Earn from capital loss and save tax)

குறுகிய கால மூலதன இழப்பை குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுடன் சரிசெய்ய முடியும் என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களுக்குத் தெரியும். இருப்பினும், நீண்ட கால மூலதன இழப்பை நீண்ட கால மூலதன ஆதாயத்துடன் மட்டுமே சரிசெய்ய முடியும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில இழப்புகளையும் செய்ய வேண்டும், இது வரியை சேமிக்க உதவும். இது கேட்பதற்குக் சற்று விநோதமாக இருக்கலாம். ஆனால் இது ஒரு லாபகரமான நடவடிக்கை. உங்கள் வரி எவ்வளவு சேமிக்கப்படும் என்பதை கணக்கிட்டு (How to save tax)  இதை முடிவு செய்யலாம். இதன்மூலம், உங்கள் போர்ட்ஃபோலியோவிலிருந்து பலவீனமான பங்குகளை நீங்கள் விலக்கலாம் அல்லது இழப்பை ஏற்படுத்தும் நிறுவனத்தின் பங்குகளை விற்கலாம்.

பத்திரங்களிலிருந்து வரியைச் சேமிக்கவும் (save tax from bonds)

வேறொரு வீட்டில் முதலீடு செய்வதன் மூலம் வீட்டை விற்றதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், 54EC பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலமும் நன்மைகளைப் பெற முடியும். ஏனெனில், இந்த பத்திரங்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை. வீட்டின் விற்பனையின் மூலதன ஆதாயங்களை 54EC பத்திரங்களில் வெவ்வேறு பகுதிகளில் முதலீடு செய்யலாம். வீட்டை விற்று 6 மாதங்களுக்குள் முதலீடு செய்ய வேண்டும். இவை பொது முதலீட்டு பிரிவுகளின் பத்திரங்கள், அவை பாதுகாப்பான முதலீடுகள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன. இருப்பினும், இந்த பத்திரங்களை 5 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது. இதில் அதிகபட்ச முதலீடு 50 லட்சம் ரூபாய் வரை மட்டுமே இருக்கும். வரி விலக்கு பெற 54EC பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது.

Read Also | 7th Pay Commission: ஆகஸ்ட் மாத ஊதியத்தில் கிடைக்கும் இரட்டை பொனான்சா!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: http

Trending News