துணிகளில் உள்ள கறையை நீக்க முடியவில்லையா? இந்த வகையில் முயற்சி செய்யுங்கள்!

துணிகளில் டீ அல்லது காபி கறைகள் படித்தால் எளிதாக அகற்ற முடியாது. இது போன்ற சூழ்நிலையில், அவற்றை எப்படி எளிதான முறையில் அகற்றலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2024, 02:11 PM IST
  • துணிகளில் தேநீர், காபி கறை.
  • எளிதில் அவற்றை அகற்ற முடியாது.
  • பின்வரும் வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.
துணிகளில் உள்ள கறையை நீக்க முடியவில்லையா? இந்த வகையில் முயற்சி செய்யுங்கள்! title=

பல சமயங்களில் டீ, காபி, கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போது ​​அவை நம் உடைகளில் சிந்த வாய்ப்புள்ளது. வெண்மையான ஆடைகளில் இந்த கறைகள் இருந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அதே சமயம் அவ்வளவு எளிதில் அதனை நீக்கவும் முடியாது. குறிப்பாக வெள்ளை நிற உடைகளில் இது போன்ற கறைகள் பட்டால் அடுத்த முறை அந்த ஆடைகளை தூக்கி ஏறிய வேண்டியது தான். துணிகளில் இந்த கறைகள் மிகவும் கெட்டியாக ஒட்டி கொள்கின்றன. இதனால் சோப்பை வைத்து எவ்வளவு தேய்த்தாலும் அதனை நீக்க முடிவதில்லை. எவ்வளவு தான் டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்தினாலும் துணிகளில் உள்ள கறைகள் அப்படியே இருக்கும்.

மேலும் படிக்க | உங்கள் காதலன்/காதலியுடன் Live-in Relationship-ல் இருக்க விருப்பமா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!

இதுபோன்ற சூழ்நிலையில் நமக்கு பிடித்த உடைகளை கூட சில நேரங்களில் தூக்கி எரியும் நிலை ஏற்படும். யூனிபார்ம் போன்றவற்றில் கறைகள் பட்டால் புதிதாக எடுத்தாகவேண்டிய சூழ்நிலை உண்டாகும். பலரும் இந்த சூழ்நிலையை கடந்து வந்து இருப்போம். இந்நிலையில் இந்த பிரச்சனைகளை சரி செய்ய சில வழிகள் உள்ளன. இவற்றை பின்பற்றினால் துணிகளில் நீண்ட நாட்களாக உள்ள கறைகளை கூட எளிதில் அகற்ற முடியும். டீ, காபி போன்ற விடாப்பிடி கறைகளையும் துணிகளில் இருந்து எளிதாக அகற்றலாம்.

துணிகளில் உள்ள கறைகளை சுத்தம் செய்வது எப்படி?

பேக்கிங் சோடா

டீ, காபி, கூல்ட்ரிங்க்ஸ் கறை உள்ள துணிகளை முதலில் தண்ணீரில் ஊற வைத்து, அதில் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாறை சேர்க்கவும். மேலும் கறை படிந்த துணிகளில் இந்த கரைசலை நன்கு தடவவும்.  10 முதல் 15 நிமிடங்கள் ஊறியவுடன் சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்போது கறை முற்றிலும் நீக்கி இருக்கும்.

வினிகர்

துணியில் டீ அல்லது காபி போன்ற பிடிவாதமான கறை இருந்தால் அந்த இடத்தில் வினிகரை தடவி 5 முதல் 10 நிமிடம் ஊற வைக்கவும். நன்கு ஊறியவுடன் எலுமிச்சை சாறு அல்லது உப்பை சேர்த்து தடவி துவைத்தால் கறை நீங்கிவிடும்.

உப்பு

துணிகளில் உள்ள கறைகளை நீக்க மற்றொரு சிறந்த வழி உப்பு ஆகும். டீ, காபி போன்ற கறை படிந்த இடத்தில் கல் உப்பை தடவவும். பிறகு அதில் எலுமிச்சையை நன்கு பிழிந்து தேய்க்கவும். இப்போது கறை நீங்கி இருக்கும்.

டூத்பேஸ்ட்

டூத்பேஸ்ட் பற்களை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல் துணிகளில் உள்ள கறைகளையும் சுத்தம் செய்கிறது. கறை படிந்த இடத்தில் டூத்பேஸ்ட் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின்பு துவைக்கவும். இதன் மூலம் கறைகள் நீங்கும்.

எலுமிச்சை சாறு

உங்கள் துணிகளில் காய்கறி அல்லது டீ கறை படிந்து இருந்தால் அதன் மீது எலுமிச்சை சாற்றை தடவவும். பிறகு துணி சோப்பை வைத்து நன்கு துவைத்ததால் கறை நீங்கிவிடும்.

மேலும் படிக்க | இந்த உணவுகளை எப்பொழுதும் பிரிட்ஜில் மட்டும் தான் வைக்க வேண்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News