இயற்கை முறையில் கூந்தலை வேகமாக வளர்ப்பது எப்படி: அனைத்து வயது பெண்களும் தங்களுக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான கூந்தல் வேண்டும் என்றே விரும்புவார்கள். இருப்பினும், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங்கலால் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நம்மை சுற்றி இருக்கும் மோசமான மாசுபாடு கூந்தல் உதிர்வுக்கு முக்கிய காரணம் ஆகும். இந்தக் காரணங்களோடு, பருவ காலத்தில் ஏற்படும் மாற்றமும் வறண்டு முடி, உயிரற்ற கூந்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைகளால், முடி வளர்ச்சி மோசமடையத் தரங்கும். எனவே கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்த சில ஹேர் மாஸ்க்குகளை நீங்கள் முயற்சி செய்துப் பார்க்கலாம். இதில் சிறப்பு விஷயம் என்னவென்றால், இந்த வைத்தியங்கள் அனைத்தும் இயற்க்கை பாட்டி வைத்தியங்கள் ஆகும். வெறும் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மட்டும் போதும். அவை என்ன என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
மெலிந்த கூந்தலை பலவீனமாக்க மேஜிக் ஹேர் மாஸ்க் | HOMEMADE HAIR MASK:
முடி உதிர்வை உடனடியாக தடுக்க வெங்காயச் சாற்றின் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தவும். இதன் மூலம் நீங்கள் அடர்த்தியான, நீண்ட, ஆரோக்கியமான மற்றும் வலுவான கூந்தலை பெறுவீர்கள். இப்போது இந்த ஹேர் மாஸ்க்கின் செயல்முறை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் -
வெங்காயம் - 1
எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி
தேன் - 1 தேக்கரண்டி
மேலும் படிக்க | ரெண்டே வாரத்துல கத்தை கத்தையா முடி வளர இந்த ஆயுர்வேத மூலிகை ஒன்று போதும்
செயல்முறை:
இந்த அற்புதமான ஹேர் மாஸ்க்கை தயாரிக்க முதலில் ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதன் தோலை நன்கு கழுவவும், இதன் பிறகு, நான்கு வெட்டி வைத்துள்ள வெங்காயத்தில் இருந்து சாறு எடுக்கவும். இந்த சாறுடன் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இந்த கலவையை உச்சம் முதல் நுனி வரை கூந்தலில் நன்கு தடவவும். சுமார் அரை மணி நேரம் ஊறவைத்த பிறகு, லேசான ஷாம்பூ கொண்டு தலைமுடியை நன்றாக கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கின் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் விரைவாக வளருவதுடன் பளபளப்பாக மாறும்.
இந்த வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க். இந்த ஹேர் மாஸ்க்கின் செயல்முறை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் -
வாழைப்பழம் - 1 (பழுத்தது)
தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செயல்முறை:
முதலில் பழுத்த 1 வாழைப்பழத்தை பாத்திரம் ஒன்றில் போட்டு நன்றாக மசிக்கவும். இப்போது இந்த கலவையில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலக்கவும். பேஸ்ட் வடிவில் தயாரானதும் முடியில் தடவி 20 நிமிடங்களுக்கு ஷாம்பு கொண்டு கழுவவும். கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
வறண்ட கூநாளுக்கு இலவங்கப்பட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க். இந்த ஹேர் மாஸ்க்கின் செயல்முறை தெரிந்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
இலவங்கப்பட்டை தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
செயல்முறை:
இந்த ஹேர் மாஸ்க்கை தயார் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் வடிவில் கலந்துக் கொள்ளவும். இப்போது இந்த பேஸ்ட்டை முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முடியை கழுவவும். இந்த ஹேர் பேக் கூந்தலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மிரட்டும் தொப்பை கொழுப்பை விரட்டி அடிக்கும் சூப்பர் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ