ரொம்ப செலவு பண்றீங்களா? அதை குறைக்க எளிதான 6 டிப்ஸ்!

How To Control Your Expense : நம்மில் பலருக்கு அதிகமாக செலவு செய்யும் பழக்கம் இருக்கும். அப்படி இருக்கும்போது, செலவுகளை குறைப்பது எப்படி தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2024, 01:32 PM IST
  • அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்துவது எப்படி?
  • சேமிப்புகளை டபுள் ஆக்க வழி!
  • என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
ரொம்ப செலவு பண்றீங்களா? அதை குறைக்க எளிதான 6 டிப்ஸ்! title=

How To Control Your Expense : சம்பளம் வந்த முதல் நாள் இருக்கும் மனநிறைவு, அடுத்த நாளே காணாமல் போகிறது. காரணம் கையில் காசு வருவதற்கு முன்னரே, ‘இதை வாங்க வேண்டும், அதை வாங்க வேண்டும்’ இந்த பிளான் போட்டு வைக்கும் நாம், சம்பளம் போட்ட முதல் தேதியிலேயே அனைத்தையும் வாங்கி குவித்து விடுகிறோம். இப்படி தன்னை மீது அதிகம் செலவு செய்பவர்களுக்கான டிப்ஸ் இது.

செலவுகளை டிராக் செய்யவும்:

உங்கள் சம்பளம் வந்த முதல் தேதியில் இருந்து கடைசி தேதி வரை என்னென்ன செலவு செய்கிறீர்கள் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டைரியில் அல்லது உங்கள் மொபைல் போனிலே கூட இந்த செலவுகளை ட்ராக் செய்யலாம். அந்த செலவு பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும், அதனை குறித்து வைக்கவும். இது நீங்கள் எங்கு தேவை இல்லாமல் செலவு செய்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்க உதவும். 

பட்ஜெட்: 

நாட்டிற்கு மட்டுமல்ல வீட்டிற்கும், தனிப்பட்ட மனிதராக உங்களுக்கும் பட்ஜெட் அவசியமான ஒன்று. உங்களின் அத்தியாவசிய செலவுகள், அவசர செலவுகள், அனாவசிய செலவுகள், ஆடம்பர செலவுகள் என அனைத்திற்கும் பற்றி போட வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு நீங்கள் ஷாப்பிங் செய்ய அதிகமாக செலவு செய்கிறீர்கள் என்றால் அதற்குரிய குறிப்பிட்ட பட்ஜெட்டை உருவாக்கி அதற்குள் மட்டும் செலவு செய்ய வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் அதிகமாக செலவிடுவதை தவிர்க்கலாம். 

தேவையான செலவுகள் vs விருப்பச் செலவுகள்: 

நம்மில் பலர் நமக்கு தேவையற்ற பொருட்களை வாங்கி அதை உபயோகிக்காமல் அப்படியே வைத்திருப்போம். இப்படி தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் செலவுகள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டிலும் பொருட்கள் குவியும். எனவே, இனி ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னர் அது உங்களுக்கு உண்மையாகவே தேவையா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். அது அப்படி உங்களுக்கு அத்தியாவசியமான தேவையாக இல்லை எனில் அதை வாங்க வேண்டாம். 

50-20-20 விதிமுறை: 

உங்களின் சம்பளத்தில் 50% அத்தியாவசிய செலவுகளாகவும், 30% விருப்ப செலவுகளாகவும், 20% சேமிப்புகள் அல்லது முதலீடுகள் ஆகவும் இருக்க வேண்டும். இதை செய்வதால் நீங்கள் உங்களுக்கு தேவையான விஷயங்களுக்கு செலவு செய்வதோடு மட்டுமின்றி, சேமிப்புகள் மூலம் வருவாயை ஈட்ட முடியும். 

மேலும் படிக்க | கல்யாணத்துக்கு இவ்வளவு செலவா? சம்பாதிப்பதை திருமணத்துக்கே செலவழிக்கும் இந்தியர்கள்!

முதலீடுகள்: 

நீங்கள் சம்பாதிப்பதை சேர்த்து வைப்பதால் மட்டும் அந்த பணம் இரட்டிப்பாகாது.  அவற்றை ஒரு நிரந்தர வருவாயாக எங்கள் மாற்ற வேண்டும் என்று நினைத்தால் பிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட், பிற முதலீடு திட்டங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து,  உங்களுக்கு எது ஏற்றதோ அதில் முதலீடு செய்ய வேண்டும். 

பெரிய செலவுகள்: 

கிரெடிட் கார்டுகள் உபயோகித்து கடலில் சிக்குவதை தவிர்க்கவும். கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து பெரிய கடனில் சிக்குவதற்கு பதிலாக, கொஞ்சம் கொஞ்சமா சேமித்து வைத்து ஒரு பெரிய பொருளை வாங்கலாம். அல்லது அந்த செலவை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளலாம். அதையும் தள்ளுபடிகள், கேஷ் பேக் ஆஃபர்கள் உள்ளிட்ட ஆப்ஷன்கள் இருப்பதாக பார்த்து தேர்ந்தெடுக்கலாம். 

மேலும் படிக்க | வருமான வரியைச் சேமிக்க சூப்பர் டிப்ஸ்! வரி சேமிப்புக்கு இது தான் சரியான நேரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News