மின்சாரம் இல்லாதபோது பிரிட்ஜில் எவ்வளவு நேரம் உணவுகள் கெடாமல் இருக்கும்?

Fridge Food safety tips | மின்சாரம் இல்லாதபோதும் பிரிட்ஜில் எவ்வளவு நேரம் உணவு பொருட்கள் கெடாமல் இருக்கும், எந்தெந்த உணவுகளை மீண்டும் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2024, 03:45 PM IST
  • பிரிட்ஜில் உணவு பொருள் வைக்க டிப்ஸ்
  • மின்சாரம் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும்?
  • இறைச்சி, மீன் எல்லாம் மீண்டும் சாப்பிடலாமா?
மின்சாரம் இல்லாதபோது பிரிட்ஜில் எவ்வளவு நேரம் உணவுகள் கெடாமல் இருக்கும்? title=

Fridge Food safety tips Tamil | உணவு பொருட்கள் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே எல்லோரது வீடுகளிலும் பிரிட்ஜ் வாங்கி வைத்திருப்போம். ஆனால், அந்த பிரிட்ஜில் இருக்கும் உணவுப் பொருட்கள் மின்சாரம் இல்லாதபோது எவ்வளவு நேரம் கெடாமல் இருக்கும் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. ஒருவேளை மின்சாரம் வரவில்லை என்றால் பிரிட்ஜில் இருக்கும் உணவுப் பொருட்களை மீண்டும் உபயோகப்படுத்தலாமா? வேண்டாமா? என ஆலோசனை கேட்டிருக்கிறீர்களா?. இல்லையென்றால் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக மின்சாரம் இல்லாதபோது அதிகபட்சம் 4 மணி நேரம் பிரிட்ஜில் இருக்கும் உணவுகள் கெடாமல் இருக்கும். குளிர்சாதனப்பெட்டியில் இருந்தாலும் ஏற்கனவே கெடும் நிலையில் இருந்த உணவுப் பொருட்கள் இதில் விதிவிலக்கு. அவை மின்சாரம் இல்லையென்றால் உடனே பாக்டீரியாக்கள் தொற்றுக்கு உள்ளாகி மேலும் கெட்டுப்போய்விடும். அத்தகைய உணவுப் பொருட்களை நீங்கள் பயன்படுத்தவே கூடாது. குறிப்பாக, நான்கு மணி நேரம் கடந்துவிட்டால் பிரிட்ஜில் இருக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, நச்சுத்தன்மை ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. பிரிட்ஜ் மூலம் அழிந்து போக்ககூடிய பாக்டீரியாக்கள் கூட மின்சாரம் இல்லாதபோது அவை உணவுப் பொருட்கள் மீது தொற்றி நச்சுத் தன்மையை உண்டாக்கிவிடும். 

மேலும் படிக்க | விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா... கம்மி விலையில் வாங்க சில டிப்ஸ்

பிரிட்ஜில் மின்சாரம் இல்லாதபோது பயன்படுத்தக்கூடாத உணவுகள்

எனவே, மின்சாரம் இல்லாமல் 4 மணி நேரத்துக்கும் மேலாக உங்கள் பிரிட்ஜில் சமைத்த அல்லது பச்சை மாட்டிறைச்சி, கோழி அல்லது கடல் உணவு இருந்தால் அவற்றை மீண்டும் உபயோகப்படுத்தவே கூடாது. வெளியில் தூக்கி எறிந்துவிட வேண்டும். அதேபோல், தயிர், பால் உள்ளிட்ட பால் பொருட்களையும் மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது. பன்றி இறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளும் தூக்கிய எறியப்பட வேண்டும். சூப்கள், உருளைக் கிழங்கு, பாலாடைக் கட்டிகள், வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் சமைத்த காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.

மீண்டும் மின்சாரம் வந்தால் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள்

வெண்ணெய் மற்றும் வெட்டப்படாத பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள், வெண்ணெய், ஜெல்லி, கெட்ச்அப், ரொட்டி ஆகியவற்றை மட்டுமே மீண்டும் பயன்படுத்தலாம். சில உணவுகள் புதியதாக இருந்தால் அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். பிரிட்ஜில் வைத்து 48 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் இருக்கும் பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம். அதற்குமேல் நேரம் ஆகி இருந்து, மின்சாரம் இல்லாமல் 4 மணி நேரத்துக்கும் மேலாக பிரிட்ஜில் இருந்திருந்தால் அவற்றை தவிர்த்துவிட வேண்டும்.

 

மேலும் படிக்க | Aadhaar Update: ஆதார் அட்டை அப்டேட் பண்ணிட்டீங்களா.. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News