குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வேண்டுமா? Top 10 வங்கிகளின் பட்டியல் இதோ!!

மலிவான வீட்டுக் கடனை எங்கு பெறலாம் என்பதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு மலிவான வீட்டுக் கடனை வழங்கக்கூடிய நாட்டின் முதல் 10 வங்கிகளைப் பற்றி பார்க்கலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2020, 05:44 PM IST
  • பல வங்கிகள் உங்களுக்கு மலிவான வீட்டுக் கடனை வழங்குகின்றன.
  • இந்தப் படியலில் SBI, HDFC, ICICI போன்ற பெரிய வங்கிகளும் உள்ளன.
  • கடன் வாங்குவதற்கு முன், வங்கிகள் கடன் செயலாக்கக் கட்டணத்தையும் வசூலிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் வேண்டுமா? Top 10 வங்கிகளின் பட்டியல் இதோ!! title=

புதுடெல்லி: வீடு வாங்குவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? மலிவான வீட்டுக் கடனை (Home Loan) எங்கு பெறலாம் என்ற கேள்வி மனதில் உள்ளதா? கவலை வேண்டாம்!! அதைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு மலிவான வீட்டுக் கடனை வழங்கக்கூடிய நாட்டின் முதல் 10 வங்கிகளைப் பற்றி பார்க்கலாம்.

இந்தப் படியலில் SBI, HDFC, ICICI போன்ற பெரிய வங்கிகளும் உள்ளன.

சமீபத்தில், இந்த வங்கிகளும் தங்கள் வட்டி விகிதங்களைக் (Interest Rates) குறைப்பதாக அறிவித்துள்ளன. இந்த முதல் 10 வங்கிகளில் பல வங்கிகளின் வட்டி விகிதங்கள் 7% க்கும் குறைவாகவே உள்ளன.

ALSO READ: Bank Passbook மூலமும் ஆதார் கார்டில் முகவரியை புதுப்பிக்கலாம்: இவற்றை நினைவில் கொள்க!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்திய காலங்களில் ரெப்போ வீதத்தையும் (Repo Rate) ரிவர்ஸ் தலைகீழ் ரெப்போ வீதத்தையும் பல முறை குறைத்துள்ளது. ஜூன் 2020 இல், ரிசர்வ் வங்கி ரெப்போ வீதத்தையும் ரிவர்ஸ் ரெபா வீதத்தையும் 0.40% குறைத்தது. அதன் பிறகு பல வங்கிகள் தங்கள் வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. உங்களுக்கு மலிவான வீட்டுக் கடனை வழங்கும் வங்கிகளின் பட்டியல் பின்வருமாறு: 

மலிவான வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகள்

யூனியன் பாங்க் ஆப் இந்தியா 6.85% - 7.75%

பாங்க் ஆப் இந்தியா 6.85% - 7.75%

மத்திய வங்கி 6.85% - 7.30%

கனரா வங்கி 6.90% - 8.90%

SBI 6.95% - 7.10%

HDFC வங்கி 6.95% - 7.10%

ICICI வங்கி 6.95% - 7.60%

PNB 7.00% - 7.60%

பாங்க் ஆப் பரோடா 7.25% - 8.25%

யூகோ வங்கி 7.15% - 7.25%

மலிவான கடனைப் பெறுவதற்கான நிபந்தனை

கடன் வாங்குவதற்கு முன், வங்கிகள் கடன் செயலாக்கக் கட்டணத்தையும் வசூலிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபட்டதாக இருக்கும்.

பொதுவாக அவை மொத்த கடனில் 0.25% முதல் 0.50% வரை இருக்கும். கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் HDFC லிமிடெட் போன்ற பல வங்கிகள் 1.25% வரை கூட செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கின்றன. வங்கிகள் மலிவான வீட்டுக் கடனை அளிப்பதாகக் கூறினாலும், உங்களால் அந்த மலிவான வீட்டுக் கடனை பெற முடியுமா இல்லையா என்பது உங்கள் சிபில் ஸ்கோரைப் (Cibil Score) பொறுத்தது. வங்கிகள் உங்களுக்கு மலிவான கடனை வழங்கவேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் சிபில் ஸ்கோர் 700 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

ALSO READ: 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு!! PhonePe-வின் மிகப் பெரிய அறிவிப்பு!!

Trending News