நம் அனைவரின் வயிற்றிலும் பல வகையான பூச்சிகள் உள்ளன, அவற்றுல் பல நமது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. எனினும் சில பூச்சிகள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் வல்லமை பெற்றது.
இந்த பூச்சிகளை வயிற்றில் இருந்து நீக்குவது மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்த பூச்சிகள் வயிற்றில் நீண்ட நேரம் இருக்கும்போது, நாம் பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடும். இந்நிலையில் வயிற்றில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளைக் கொல்ல உதவும் உள்நாட்டு செய்முறையை இன்று நாம் உங்களோடு பகிர இருக்கிறோம்.
வயிற்றில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்ல நாம் பயன்படுத்து உள்நாட்டு தயாரிப்பு மருந்தில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது. எலுமிச்சை நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்டும் உணவு பொருட்களில் ஒன்றாகும். மேலும் எளிதாக கிடைக்கும் பொருட்களிலும் ஒன்றாகும். இதன் ஆரோக்கிய நன்மைகளால் பலர் தவறாமல் உட்கொள்ளும் பொருளாகவும் இது உள்ளது.
எலுமிச்சை சத்தான கூறுகள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது, கூடுதலாக, இது வைட்டமின்-C மற்றும் சிட்ரிக் அமிலத்தின் வளமான ஆதாரமாகவும் கருதப்படுகிறது. இந்த காரணத்திற்காக, வயிற்றில் இருக்கும் மோசமான பாக்டீரியாக்களைக் கொல்ல இது உகந்ததாக வேலை செய்கிறது.
சரி இந்த பூச்சிகளை போக்கும் மருந்தை எவ்வாறு தயாரிப்பது?
முதலில் எலுமிச்சை வெட்டி அதன் சாற்றை நன்றாக பிரித்தெடுக்கவும். இப்போது ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலக்கவும். இந்த பானத்தை வாரத்திற்கு 2 முறையாவது குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் செயல்முறை மூலம் நிச்சையம் நீங்கள் பயனடைவீர். குறிப்பாக உங்கள் வயிற்றில் உள்ள தீங்கு விலைவிக்கும் பூச்சிகள் நிச்சையமாக கொல்லப்படும்.