மத்திய அரசில் பணி புரியும் ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) என்ற புதிய திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேலையை விட்டு ஓய்வு பெரும் போது, மாதந்தோறும் அவர்களுக்கு நிலையான தொகை கிடைக்கும் என்பதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. இந்த புதிய திட்டத்திற்கும் தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) எனப்படும் மற்றொரு திட்டத்திற்கும் இடையே அவர்கள் தேர்வு செய்யலாம். UPS மூலம் ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு பின்பு அவர்கள் சம்பாதித்ததில் பாதியைப் பெறுவார்கள், அதாவது அவர்கள் இனி வேலை செய்யாதபோதும் அதிக பணம் கிடைக்கும். 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வரும் போது, UPSன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வாறு மாறக்கூடும் என்பதை பார்ப்போம். புதிய விதிகள் ஜனவரி 1, 2026 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அரசாங்கத்திடம் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் இல்லை. வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும். அதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் அடுத்த ஆண்டு வருமா என்று எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
8வது சம்பள கமிஷன்
UPS முறையின் கீழ் ஒருவர் எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்பதை கண்டுபிடிப்பதற்கு முன், புதிய சம்பள கமிஷன் தொடங்கும் போது அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் எவ்வாறு மாறுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஃபிட்மென்ட் காரணி எனப்படும் சிறப்பு எண்ணைப் பயன்படுத்தி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, 7வது ஊதிய விதிகளை கொண்டு வந்த போது, சம்பளம் எவ்வளவு உயரும் என்பதைத் தீர்மானிக்க 2.57 என்ற ஃபிட்மென்ட் காரணியைப் பயன்படுத்தினார்கள். 8வது ஊதியக் குழுவின் கீழ் அரசு 1.92 என்ற ஃபிட்மென்ட் காரணியைப் தேர்வு செய்யலாம் என்று பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் தேசிய கூட்டு ஆலோசனை இயந்திரங்களின் (NC-JCM) செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா, மத்திய அரசு குறைந்தபட்சம் 2.86 என்ற ஃபிட்மென்ட் காரணியை தேர்வு செய்ய வேண்டும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் அதிக சம்பளம் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
பிட்மென்ட் காரணி
பிட்மென்ட் காரணி எவ்வளவு மாறினாலும், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகிய இரண்டும் மாறும். மத்திய அரசு ஃபிட்மென்ட் காரணியாக 2.86ஐப் பயன்படுத்தினால், அரசு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் ரூ.18,000-லிருந்து ரூ.51,480 ஆக உயரும். அதேபோல், ஃபிட்மென்ட் காரணியாக 2.86 என நிர்ணயம் செய்தால், ஓய்வூதியம் ரூ.25,740 ஆக அதிகரிக்கும். அதே சமயம் UPS மூலம் ஏப்ரல் 1, 2025 முதல் ஓய்வு பெற்ற பணியாளர்கள் கடந்த ஆண்டு வேலை செய்த சராசரி சம்பாதித்ததில் பாதியைப் பெறுவார்கள் என்று விதி கூறுகிறது. எனவே, கணக்கீடுகள் அப்படியே இருந்தால் அவர்களுக்கு அந்த 25,740 ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும். ஃபிட்மென்ட் காரணி மாறினால், 8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டிலும் அதற்கேற்ப மாற்றம் ஏற்படும்.
UPS மூலம் முக்கிய மாற்றங்கள்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு உத்தரவாதமான ஓய்வூதிய திட்டமாக உள்ளது. ஒரு நபர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பணியில் இருந்து ஓய்வு பெரும் போது குறைந்தபட்சம் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 பெறுவார். அதே சமயம் ஊழியர் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் பெறுவதற்கு, ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் குறைவாக பணிபுரிந்தால், அவர்கள் எவ்வளவு காலம் பணிபுரிந்தார்கள் என்பதன் அடிப்படையில் சிறிய தொகையைப் பெறுவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ