ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இணைக்கப்பட உள்ளன. வாரியக் கூட்டத்தில், ஹெச்டிஎஃப்சி வங்கியுடன் ஹெச்டிஎஃப்சி ஐ இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் கிரேட்டர்ஸ் இந்த இணைப்பில் ஈடுபடுவார்கள். இன்று அதாவது 4 ஏப்ரல் 2022, திங்கட்கிழமை காலை 11:30 மணிக்கு இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற உள்ளது.
போர்ட்ஃபோலியோ மற்றும் வாடிக்கையாளர் தளத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள்
இந்த இணைப்பு குறித்து ஹெச்டிஎஃப்சி கூருகையில், ஹெச்டிஎஃப்சி வங்கியின் வீட்டுக் கடன் போர்ட்ஃபோலியோவை மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளது. இதனுடன், தற்போதுள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. ஹெச்டிஎஃப்சி லிமிடெட் மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியின் இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம் காலாண்டில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்த இணைப்புக்குப் பிறகு, ஹெச்டிஎஃப்சி வங்கியில் ஹெச்டிஎஃப்சி 41% பங்குகளைக் கொண்டிருக்கும். அத்துடன் ஹெச்டிஎஃப்சி ஹோல்டிங்ஸ் கூட ஹெச்டிஎஃப்சி உடன் இணைக்கப்படும்.
Housing Development Finance Corporation Limited (HDFC) will merge into HDFC Bank, reads the official document pic.twitter.com/Ky2Q9mXoas
— ANI (@ANI) April 4, 2022
மேலும் படிக்க | தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை
ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தலைவர் தீபக் பரேக் கூறுகையில், ரேரா அமலாக்கம், வீட்டுவசதித் துறைக்கான உள்கட்டமைப்பு அந்தஸ்து, மலிவு விலையில் வீட்டுவசதிக்கான அரசாங்கத்தின் முன்முயற்சி போன்றவற்றால், வீட்டு நிதி வணிகத்தில் பெரிய ஏற்றம் ஏற்படும். இது தவிர, வங்கிகள் மற்றும் என்பிஎஃப்சிகளின் கட்டுப்பாடு கடந்த சில ஆண்டுகளில் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. இது இணைப்புக்கான வாய்ப்பை உருவாக்கியது என்றார்.
இந்நிலையில் ஹெச்டிஎப்சி இணைப்பு அறிவிப்பு வெளியான நிலையில் ஹெச்டிஎப்சி பங்குகள் 15 சதவீதமும், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 13.56 சதவீதமும் உயர்ந்துள்ளது. இன்றைய வர்த்தக உயர்வின் மூலம் இரு நிறுவனப் பங்குகளும் 52 வார உயர்வை எட்டியுள்ளது.
தேசியப் பங்குச்சந்தை நிப்டி 394 புள்ளிகள் உயர்ந்து 18 ஆயிரத்து 65 ஆக இருந்தது. ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தை இந்நிலையில் வங்கியுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் பங்கு மதிப்பு பத்து விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்துள்ளது.
ஹெச்டிஎப்சி வங்கியிடம் 6.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு உள்ளது. இந்த இணைப்பு மூலம் இந்நிறுவனங்களின் மதிப்பு உயர்வது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR