ஒரு கிரகம் மாறும் போது, அதாவது அஸ்தமனம் அல்லது உதயமாகும் போது, நிச்சயமாக ஒருவரின் வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிக்கும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. கல்வி, குழந்தைகள், சமயப் பணி, மங்களகரமான பணி, செழிப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றின் காரணியாக குரு கருதப்படுகிறார். குரு அஸ்தமிக்கும் போது அனைத்து விதமான சுப காரியங்களும் தடைபடும். ஆனால் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி குரு கும்ப ராசியில் அஸ்தமித்திருந்தாலும், தற்போது 2022 மார்ச் 23 ஆம் தேதி குரு உதயமாகப் போகிறார். வியாழனின் உதயம் அனைத்து ராசிகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வியாழனின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு 11ஆம் வீட்டில் விழாயன் உதயமாகுவார். இந்த இடம் வருமானம் தரும் இடம் என்று அழைக்கப்படுகிறது. மேஷ ராசிக்காரர்கள் வியாழனின் எழுச்சியால் பண வரவு எற்படும். எப்படியாவது வருமானம் அதிகரிக்கும், வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். முதலீடு செய்தால், நீங்கள் சிறந்த பலன்களைப் பெறலாம். தொழிலதிபராக இருந்தால் பெரிய ஒப்பந்தம் ஒன்றை பெறலாம், இது வருமானத்தை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
ரிஷபம்: ரிஷபத்தின் பத்தாம் வீட்டில் விழாயன் உதயமாகுவார். இது வேலை செய்யும் இடமாக கருதப்படுகிறது. அதாவது ரிஷபம் ராசிக்காரர்கள் தொழில், வியாபாரத்தில் தொடர்புடையவர்களாக இருந்தாலும் எல்லாத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். இது தவிர, ஒரு சிறந்த வேலை வாய்ப்பும் கிடைக்கலாம்.
சிம்மம்: வியாழனின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்தில் வியாழன் உதயமாவார். இந்த இடம் திருமண வாழ்க்கைக்கானது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனைவியுடன் உறவு வலுவாக இருக்கும். எந்த ஒரு வேலையிலும் பரஸ்பரம் முழு ஒத்துழைப்பு இருக்கும். இது தவிர, இந்த நேரம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR