புதுடெல்லி: நீங்கள் எங்காவது வேலை செய்யும் பணியாளராக இருந்து, பிஎஃப் கணக்கும் வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ள தெய்தியாக இருக்கும். பி.எஃப் கணக்குகளை நிர்வகிக்கும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் கணக்கில் வட்டிப் பணத்தைப் டெபாசிட் செய்துள்ளது. இதன் மூலம் 6 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.
கணக்கில் வட்டி பணம் வந்துள்ளது
2021-22 நிதியாண்டில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 22.55 கோடி PF கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு 8.50 சதவீத வட்டியை வழங்கியுள்ளது. சமீபத்தில், ஓய்வூதிய நிதி அமைப்பு ஒரு ட்வீட்டில், '2020-21 நிதியாண்டில் 22.55 கோடி கணக்குகளில் 8.50 சதவீத வட்டி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது' என்று கூறியது. நீங்களும் PF கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செயல்முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி உங்கள் கணக்கின் இருப்பைச் சரிபார்க்கலாம்.
மிஸ்டு கால் மூலம் உங்கள் இருப்பைச் சரிபார்க்கவும்
நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவராக இருந்து, உங்கள் மொபைல் எண் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UAN எண் இல்லாமலும் உங்கள் PF கணக்கு இருப்பு பற்றிய தகவலைப் பெறலாம்.
இதற்கு, EPFO கணக்கு வைத்திருப்பவர்கள், 011-22901406 என்ற எண்ணில் மிஸ்டு கால் செய்து, தங்கள் கணக்கின் இருப்பை அறியலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் PF கணக்கு இருப்புத் தகவல் சிறிது நேரத்திற்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும்.
SMS மூலம் உங்கள் இருப்பை தெரிந்து கொள்ளலாம்
அனைத்து PF சந்தாதாரர்களும் EPFO இன் SMS வசதியைப் பயன்படுத்திக்கொண்டு தனது PF கணக்கின் இருப்பை சரிபார்க்கலாம். இந்த வசதியைப் பெற, 77382-99899 என்ற எண்ணுக்கு 'EPFOHO UAN' என்று SMS செய்ய வேண்டும். SMS செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் PF கணக்கு (PF Account) இருப்புத் தகவல் சிறிது நேரத்திற்குள் உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும்.
ALSO READ | EPFO முக்கிய செய்தி: இன்றே இந்த பணியை செய்து முடிக்கவும், ட்வீட் மூலம் தெரிவித்தது
இந்த வழியிலும் பேலன்ஸை தெரிந்துகொள்ளலாம்
- முதலில், PF கணக்கு வைத்திருப்பவர் https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- இதற்குப் பிறகு, உங்கள் UAN எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு லாக் இன் செய்ய வேண்டும்.
- லாக் இன் செய்த பிறகு, உங்கள் பிஎஃப் கணக்கின் இருப்பை அறிய இணையதளத்தைப் பார்வையிடலாம்.
UMANG செயலி மூலம் இருப்பைச் சரிபார்ப்பது எப்படி?
- புதிய கால நிர்வாகத்திற்கான (New Age Governance) ஒருங்கிணைந்த மொபைல் செயலியான, (Umang app) UMANG செயலியைத் திறக்கவும்.
- இப்போது EPFO -ல் கிளிக் செய்யவும்.
- 'employee-centric services' என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் 'view passbook' என்பதைக் கிளிக் செய்து UAN மற்றும் ஒரு முறை கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும்.
- இதற்குப் பிறகு, உறுப்பினர்கள் EPF இருப்பை சரிபார்க்க முடியும்.
ALSO READ | ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி: அதிகரிக்கிறது ஓய்வூதியம், முழு விவரம் இதோ!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR