புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, அலுவலக பணி கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க பணியிடங்களில் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது. இதன் கீழ், ஊழியர்கள் தங்கள் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து செய்ய முடியும்.
அதே நேரத்தில், இதுபோன்ற வசதிகளுக்கான நிரந்தர விதிகளை கொண்டுவர அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதன் கீழ் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய முடியும்.
சேவைத் துறைக்கு (Service Sector) புதிய விதிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய விதிகளில் வேலை நேரங்களில் நெகிழ்வுத்தன்மை மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்யும் (Work from Home) ஆப்ஷனும் இருக்கும். இது தொடர்பாக, மாதிரி நிலை உத்தரவு குறித்து அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனைகளைப் பெறக்கூடும் என தெரிகிறது.
Work from Home பற்றி பரிசீலனை
COVID-19 தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கருத்தில் கொண்டு, சேவைத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாடல் ஸ்டாண்டிங் ஆர்டர் பற்றி தொழிலாளர் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. வேலை செய்வதற்கான வழியை மிகவும் நெகிழ்வானதாக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதிய விதிகளில், வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்வதோடு, வேலை செய்யும் முறையை எளிதாக்குவதற்கான வழியும் வாதிக்கப்படுகிறது. வேலையை எளிதாக்குவதற்கு, Work from Home-க்கான ஆப்ஷனும் பரிசீலிக்கப்படுகிறது. சேவைத் துறைக்கு இதற்கு முன்னர் மாடல் ஸ்டாண்டிங் ஆர்டர் எதுவும் இருந்ததில்லை.
அறிக்கையின்படி, தொழிலாளர் செயலாளர் அபூர்வா சந்திரா, வாராந்திர வேலைக்கான நேர வரம்பு 48 மணி நேரமாக இருக்கும், ஆனால் பணியாளர்கள் செய்ய விரும்பும் அனைத்து வேலைகளுக்கும் நெகிழ்வுத்தன்மை இருக்கும் என்று கூறுகிறார். வேலை செய்வதில் நெகிழ்வுத்தன்மை மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான ஆப்ஷன் ஆகியவை சேர்க்கப்படும்.
சட்ட வழிகாட்டுதல்கள்
ஊடக அறிக்கைகளின் கருத்துபடி, மாடல் ஸ்டாண்டிங் ஆர்டர் ஒரு சட்ட வழிகாட்டல் போல இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இது பணியாளர் மற்றும் முதலாளி இருவருக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.
இதில், பணியாளர் தங்கள் பணியை எங்கு செய்ய வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். முழுமையாக Work from Home, ஹைப்ரிட் Work from Home அல்லது அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் ஆப்ஷன் ஆகியவை இதில் கொடுக்கப்பட்டிருக்கும்.
ALSO READ: ரயில்வேயில் 1000 க்கும் மேற்பட்ட காலியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR