நியூடெல்லி: எரிவாயு விலை உயர்ந்த நிலையில் இருக்கும் நிலையில், பொதுமக்களுக்கு விரைவில் நிவாரணம் கொடுக்கும் செய்தி வரும் வாய்ப்பு இருக்கிறது. மத்திய அரசு விரைவில் காஸ் விலை குறைய சிறப்பு திட்டத்தை வகுத்து வருகிறது. இதன் காரணமாக சமையல் எரிவாயு மற்றும் சி.என்.ஜி விலை குறையும். கடந்த மாதமும் வர்த்தக எரிவாயுவின் விலை உயர்ந்துள்ள நிலையில் அரசு, தற்போது விலைகளை குறைப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறது.
எரிவாயு விலை வரம்பு நிர்ணயம்
பொதுத்துறை நிறுவனங்களின் பழைய எண்ணெய் வயல்களில் இருந்து வெளிவரும் இயற்கை எரிவாயுவின் விலை வரம்பை நிர்ணயிக்க முடிவெடுக்கும் வகையில், எரிவாயு விலையை மறுஆய்வு செய்ய மத்திய அரசின் குழு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக அது வழங்கும் பரிந்துரை இன்னும் சில நாட்களில் வெளியாகும். அதன் அடிப்படையில், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி இரண்டின் விலையும் குறையும் என்று கூறப்படுகிறது.
அறிக்கை விரைவில் அரசின் முன் சமர்ப்பிக்கப்படும்
திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ். பரேக் தலைமையிலான குழு, அதன் கூட்டத்தை நடத்தி, இறுதி வடிவம் கொடுத்து வருவதாக ஏஎனை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் குழு விரைவில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று நம்பப்படுகிறது.
அதிகாரிகளிடமிருந்து தகவல்
அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்தக் குழு 2 வகையான விலை நிர்ணய முறையை பரிந்துரைக்கலாம். ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் பழைய எண்ணெய் வயல்களில் இருந்து வெளிவரும் எரிவாயு விலைக்கான விலை வரம்புக்கும், பிற எண்ணெய் வயல்களில் இருந்து வரும் எரிவாயுகளுக்கான விலை நிர்ணயிப்பது மாறுபடலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | அல்-ஷபாப் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட மொகடிஷு ஹோட்டல் சுற்றிவளைப்பு: 4 பேர் பலி
இடத்திற்கு ஏற்ப ஃபார்முலாக்கள்
இதனுடன், கடினமான பகுதிகளுக்கு வேறு சூத்திரமும் பரிந்துரைக்கப்படலாம். பிராந்தியத்திற்கு ஏற்ப, அரசாங்கம் வெவ்வேறு சூத்திரங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், தற்போதுள்ள கட்டண சூத்திரத்தை அதிக கட்டணத்தில் பராமரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரிந்துரைகளின் அடிப்படையில், விலை மாற்றம் இருக்கும் என்றும், அது பொதுமக்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு: 6 பேர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ