இபிஎஃப்ஓ ஓய்வூதிய காலக்கெடு: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ -வின் கீழ், அதிக பென்சன் பெறுவதற்கு பயனாளிகள் விண்ணப்பித்து வருகின்றனர். நீங்களும் ஓய்வு பெற்ற பிறகு அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால், இப்போது இபிஎஃப்ஓ அமைப்பு அதை எளிதாக்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 3 கடைசி நாளாகும். இது தொடர்பாக இபிஎஃப்ஓ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி கூட்டு விருப்பத்தின் (ஜாயிண்ட்ட் ஆப்ஷன்) வெரிஃபிகேஷனும் விளக்கப்பட்டுள்ளது. இது தவிர, சம்பள விவரங்கள் மற்றும் முதலாளி / நிறுவனம் வழங்கிய தகவல்களை சரிபார்க்கும் செயல்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டு விருப்பம் மற்றும் உயர் ஓய்வூதியத்திற்கான விண்ணப்பங்களை கள அலுவலகங்கள் ஆய்வு செய்யும் என்று இபிஎஃப்ஓ சுற்றறிக்கையில் கூறியிருந்தது. அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், முதலாளிகள் வழங்கிய தகவல்கள் சரிபார்க்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
ஒரு தகுதியான ஊழியர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில், வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதிய நிதிக்கு நிதியை மாற்ற அனுமதிக்கும் ஒப்பந்தம், நிலையான ஊதிய உச்சவரம்பான ரூ.5,000/ ரூ.6,500 -ஐத் தாண்டி அதிக ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதியில் முதலாளியின் பங்குக்கான சான்று ஆகியவை அடங்கும். மற்றும் எதிர்காலத்தில் உண்மையான ஊதியத்தில் 8.33% வரை EPS க்கு அதிக பங்களிப்பிற்காக முதலாளி / நிறுவனம் மற்றும் பணியாளரின் அறிவிப்புடன் கூடிய கூட்டு விருப்ப படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிக ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் யார்?
1) செப்டம்பர் 1, 2014 க்கு முன்பிலிருந்து உறுப்பினர்களாக இருக்கும் ஊழியர்கள் மற்றும் அந்த தேதியில் அல்லது அதற்குப் பிறகு தொடர்ந்து உறுப்பினராக இருந்தவர்கள்
2) நிலையான ஊதிய உச்சவரம்பான ரூ. 5,000 அல்லது ரூ. 6,500க்கு மேல் சம்பளத்தில் பங்களிப்பு செய்த பணியாளர்கள் மற்றும் முதலாளிகள்.
குறை தீர்க்கும் முறையும் தொடங்கப்பட்டது
இபிஎஃப்ஓ ஒரு குறை தீர்க்கும் செயல்முறையையும் தொடங்கியுள்ளது. ஓய்வூதியம் தொடர்பான அனைத்து புகார்களும் நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மட்டத்தில் தீர்க்கப்படும். புகார் அளிக்கும் போது விவரங்கள் பொருந்தவில்லை என்றால், உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர், ஓய்வூதியதாரர்களுக்கு தகவல் கொடுத்து ஒரு மாதத்திற்குள் முதலாளிகளிடம் இருந்து தகவல்களைப் பெற வேண்டும். முழுமையான தகவல் கிடைத்தால், இபிஎஃப்ஓ அதற்கேற்ப செயல்முறையைத் தொடரும். விவரங்கள் கிடைக்கவில்லை என்றால், தகுதியின் அடிப்படையில் உத்தரவு அனுப்பப்படும்.
இபிஎஃப்ஓ மற்றும் நிறுவனம் / முதலாளியின் விவரங்கள் பொருந்தினால், விண்ணப்பதாரருக்கு செலுத்த வேண்டிய தொகையை கணக்கிட்டு ஓய்வூதியதாரரின் கணக்கிற்கு மாற்றுவதற்கு APFC/RPFC-II/RPFC-I ஆல் உத்தரவு பிறப்பிக்கப்படும். விவரங்கள் பொருந்தாத சந்தர்ப்பங்களில், அது பற்றி தெரிவிக்கப்படும். மேலும், தகவல்களை பூர்த்தி செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும்.
FY23 -க்கான பிஎஃப் வைப்பு வட்டி விகிதம் 8.15%
இபிஎஃப்ஓ FY23 -க்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது. புதிய விகிதம் கடந்த ஆண்டை விட சற்று அதிகமாகும். சிறு சேமிப்பு பிரிவில் EPF வட்டி விகிதம் மிக அதிகமாக உள்ளது.
காலக்கெடு நீட்டிக்கப்படுமா?
அதிக சம்பளத்தில் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். முந்தைய காலக்கெடு மார்ச் 3, 2023 ஆக இருந்தது. பின்னர் அது மே 3, 2023 வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கல்கள் மற்றும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து (EPFO) தெளிவான வழிகாட்டுதல் இல்லாததால், சந்தாதாரர்களின் வசதியை கருதி அமைப்பு, காலக்கெடுவை மீண்டும் நீட்டிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ