EPFO சமீபத்திய புதுப்பிப்பு: பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தகுதியான ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்துள்ளது. இபிஎஃப்ஓ அமைப்பு மூன்றாவது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தது.
மேலும் ஊழியர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் 15 நாட்களுக்கு, அதாவது ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருங்கால வைப்பு நிதி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (EPS), 1995 இன் கீழ் அதிக ஓய்வூதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்ய இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை வருங்கால வைப்பு நிதி நிர்வாகக் குழு முன்னதாக அறிவித்தது. மேலும் இபிஎஃப்ஓ விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்களின் பட்டியலையும் வெளியிட்டது.
1995 ஆம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தால் (EPS) கட்டாயப்படுத்தப்பட்ட ரூ. 15,000 என்ற நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு மேல், அதிக சம்பளத்தில் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான சூத்திரத்தை இபிஎஃப்ஓ வெளிப்படுத்தியுள்ளது.
பிஎஃப் சந்தாதாரர்கள் அசல் சம்பளத்தில் அதிக ஓய்வூதியத்திற்காக பதிவு செய்யலாம் என்றும், இபிஎஃப்ஓ -இன் கள அதிகாரிகள் இதை சரிபார்த்த பிறகு இது பொருந்தும் என்றும் வருங்கால வைப்பு நிதி நிர்வாகக் குழு கூறியது.
இபிஎஃப்ஓ உயர் ஓய்வூதியத் திட்டம்: வழிகாட்டுதல்கள்
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) EPF திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத் திட்டத்திற்காக, பிஎஃப் சந்தாதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்க தங்கள் கள அலுவலகங்களை அனுமதித்துள்ளது.
மேலும் படிக்க | இன்னும் 3 நாட்கள் தான்! ஜூலை 1 முதல் ஏற்படப்போகும் அதிரடி மாற்றங்கள்!
எனினும், இபிஎஃப்ஓ கள அலுவலர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செயல்முறைகளையும் பின்பற்ற வேண்டும்:
- மாதத்திற்கு ரூ. 5000 / ரூ. 6500 / ரூ. 15000 என்ற சட்டப்பூர்வ ஊதிய உச்சவரம்புக்கு மேல் பணியாளரின் ஊதியத்தில் முதலாளியின் பிஎஃப் பங்கு பங்களிப்பு செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அவர்கள் சரிபார்க்க வேண்டும்.
- ஊதியம் ஊதிய உச்சவரம்பைத் தாண்டிய நாளிலிருந்து அல்லது நவம்பர் 16, 1995, எது பிற்பட்டதோ, அதிலிருந்து, அப்போது வரை / ஓய்வு பெறும் நாள் அல்லது சூப்பரானுவேஷன் வரை ரெமிட்டன்ஸ் கணக்கிடப்பட வேண்டும்.
- பணியளிப்பவர் செலுத்த வேண்டிய நிர்வாகக் கட்டணங்கள் அதிக ஊதியத்தில் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை கள அலுவலகங்கள் பார்க்க வேண்டும்.
- பெறப்பட்ட பங்களிப்பின் அடிப்படையில், EPFS, 1952 இன் பாரா 60 இன் படி, ஊழியரின் EPF கணக்கு வட்டியுடன் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இபிஎஃப்ஓ உயர் ஓய்வூதியத் திட்டம்: தேவையான ஆவணங்கள்
கூட்டு ஓய்வூதிய விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்பதை இபிஎஃப்ஓ கள அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்:
- ஆப்ஷன் / ஜாயிண்ட் ஆப்ஷன் விருப்பங்களை சரிபார்ப்பதற்கான விண்ணப்பங்களுடன் முதலாளி / நிறுவனம் சமர்ப்பித்த ஊதிய விவரங்கள்.
- முதலாளி / நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சம்பள சீட்டு / கடிதம்.
- கூட்டுக் கோரிக்கையின் நகல் மற்றும் முதலாளியிடமிருந்து ஒப்பந்தம்.
- 4.11.2022 க்கு முன் வெளியிடப்பட்டு, பிஎஃப் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட கடிதம். இதில் அதிக ஊதியத்தில் பிஎஃப் பங்களிப்பு குறிக்கப்பட்டிருக்கும்.
EPS -ஐ யார் தேர்வு செய்ய வேண்டும்?
அதிக மாதாந்திர ஓய்வூதிய வருவாயை எதிர்நோக்கும் வரி செலுத்தும் தனிநபர்கள் EPS -ஐ தேர்ந்தெடுக்க வெண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஓய்வு பெறும்போது பெரிய தொகை தேவைப்படாமல் மாதாந்திர ஊதியத்தை விரும்பும் நபர்கள் இதை தேர்வு செய்யலாம்.
மொத்த தொகையின் அளவு குறையலாம்
நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், பணி ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் மொத்த தொகையில் அளவு குறையக்கூடும். ஆனால் உங்கள் மாதாந்திர ஓய்வூதியம் அதிகரிக்கும். இந்த திட்டத்தில் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் உள்ளன என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இன்னும் சில ஆண்டுகளே பணிக்காலம் உள்ள ஊழியர்களின் கவனம் மொத்தத் தொகையில் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | Income Tax Return: ஐடிஆர்-1ஐ யார் பயன்படுத்தலாம்? யார் பயன்படுத்த முடியாது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ