கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: கார்த்திக் vs சாமுண்டீஸ்வரி.. சந்திராகலாவுக்கு சிக்கல்

Karthigai Deepam Today Episode: கலசத்துடன் வந்த கார்த்திக், கம்பீரமாய் நின்ற சாமுண்டீஸ்வரி.. சந்திரா கலாவுக்கு சிக்கல் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2025, 12:31 PM IST
கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்: கார்த்திக் vs சாமுண்டீஸ்வரி.. சந்திராகலாவுக்கு சிக்கல் title=

Tamil Serial Karthigai Deepam Latest News: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் கார்த்திக் வெளிநாட்டவருக்கு கைமாறிய கலசத்தை கைப்பற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது கார்த்திக் மற்றும் ரேவதி என இருவரும் கலசத்தை கொண்டு வருகின்றனர். இதே சமயத்தில் ஊர் மக்களும் கலசத்தை கோவிலுக்கு கொண்டு செல்வதற்காக சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வருகின்றனர். பிறகு கலசம் எங்கே என்று கேட்க ரேவதி பூஜை செய்து கொண்டு வருகிறாள். 

அதன் பிறகு எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி வர இங்கே கோவிலில் கலசம் எப்படியும் வராது என சிவனாண்டி கனவு கண்டு கொண்டு இருக்க வெடி சத்தத்துடன் கலசத்தைக் கொண்டு வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு கோவிலில் வைத்து கலசத்துக்கு பூஜை செய்து சாமுண்டீஸ்வரிக்கு முதல் மரியாதை கொடுத்து அவளது கையால் கோபுரத்தில் வைத்து கும்பாபிஷேகம் செய்கிறாள். 

அதைத்தொடர்ந்து பெண்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்க கூடாது.. பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்தவர்கள் இல்லை அவர்களை விட அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்தவர்கள். பெண்களுக்காக இன்னொரு ஸ்கூல், காலேஜ் திறக்கப் போகிறேன். அதுமட்டுமல்லாமல் ஒரு ஃபேக்டரியையும் ஓபன் செய்து பெண்களுக்கு வேலை கொடுக்கப் போகிறேன் என்ன சொல்ல எல்லோரும் சாமுண்டீஸ்வரியை பாராட்டுகின்றனர். 

பிறகு சிவனாண்டி மற்றும் சந்திரகலா என இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்க அவ நம்மளை அவமானப்படுத்திட்டு போயிட்டா.. இந்த கலசம் எப்படி வந்தது என சிவனாண்டி கோபப்படுகிறான். சந்திரகலா கலசத்தை எடுத்தது நான்தான் என்பதை கார்த்திக் போட்டுக் கொடுத்து விடுவானோ என பயப்படுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Trending News