Rahu Ketu Transit 2025: ஜோதிடத்தில் ராகு கேது கிரகங்கள் சர்ப்ப கிரகம், பாவ கிரகம், நிழல் கிரகம் என அழைக்கப்படுகின்றன. இவை இரண்டுமே எப்போதும் வக்கிர நிலையில் பெயர்ச்சியாகும்
ராகு கேது இரண்டும் எப்போதும் எதிர் எதிர் திசைகளில் அமர்ந்திருக்கும் நிலையில் இவ்விரண்டு ராசிகளும், மே 18ஆம் தேதி பெயர்ச்சியாக உள்ள நிலையில், சில ராசிகளுக்கு இதனால் அற்புதமான பலனை கொடுக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
2025 கிரக பெயர்ச்சிகள்: ஜோதிடத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் சனிப்பெயர்ச்சி குரு பெயர்ச்சியை போலவே, ராகு கேது பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.
ராகு கேது பெயர்ச்சி: பெரும்பாலானோர் ராகு கேது என்றாலே எதிர்மறை பலன்களை கொடுக்கக்கூடிய கிரகங்கள் என கருதுகின்றனர். ஆனால் தனது நிலைக்கு ஏற்றபடி, இவ்விரு கிரகங்களும், சுப மற்றும் அசுப பலன் இரண்டையும் கொடுக்கின்றன.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில், மே மாதம் 18ஆம் தேதி, ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளன. இதனால் சுப பலன்களை பெறும் அதிர்ஷ்ட ராசிகளை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: ராகு கேது பெயர்ச்சியினால், மேஷ ராசியினருக்கு, வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் இருந்த தடைகள் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறன் பாராட்டப்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.
மிதுனம்: ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிகளுக்கு பலன்களைத் தரும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வாய்ப்பு உண்டு.. புத்திசாலித்தனத்தால் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
விருச்சிகம்: ராகு கேது பெயர்ச்சி விருச்சிக ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். கடன் தொல்லை நீங்கும். பணவரவினால் பொருளாதார நிலையும் மேம்படும். புதிய வீடு வாகனம் ஏற்படும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
தனுசு: ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசியினருக்கு, நல்ல நேரத்தின் தொடக்கமாக இருக்கும். நிதி பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியம் இருக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டும் அங்கீகாரமும் கிடைக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தரப்பிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
மகரம்: ராகு கேது பெயர்ச்சி மகர ராசிகளுக்கு, நன்மைகளை கொடுக்கும். வேலையில் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். பண பலம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு. சின்ன சின்ன ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.