இபிஎஃப்ஓ ஓய்வூதியம்: ஒரு நிறுவனத்திலோ அல்லது தனி நபரிடமோ பணியில் இருந்து, உங்கள் ஊதியத்திலிருந்து இபிஎஃப் கழிக்கப்படுகின்றது என்றால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஊதியம் பெறும் வகுப்பினர் பெறும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்தது. இப்போது இது தொடர்பான புதிய அப்டேட் வந்துள்ளது. ‘இபிஎஸ்-95 ராஷ்ட்ரிய சங்கர்ஷ் சமிதி (EPS-95 Rashtriya Sangharsh Samiti)’ குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்துவதற்கு தொழிலாளர் அமைச்சகத்திற்கு 15 நாட்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தது.
நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை
இபிஎஸ்-95 ராஷ்ட்ரிய சங்கர்ஷ் சமிதியின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அக்குழு அளித்துள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம்-1995 அதாவது EPS-95 ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மூலம் இயக்கப்படுகிறது. இதன் கீழ், ஆறு கோடிக்கும் அதிகமான ஊழியர்களும், 75 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனாளிகளாக உள்ளனர்.
மேலும் படிக்க | EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஓய்வூதியர்களுக்கான மருத்துவ வசதிகளும் குறைவாகவே உள்ளன
மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சங்கர்ஷ் சமிதி, இபிஎஸ்-95 ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவாக உள்ளது என்று கூறியுள்ளது. இது தவிர, மருத்துவ வசதிகளும் குறைவாகவே உள்ளன. இதனால் ஓய்வூதியர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த ஓய்வூதிய தொகையை 15 நாட்களுக்குள் உயர்த்தி அறிவிக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை நிறுத்தப்படும் என்றும், சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை, 1,000 ரூபாயில் இருந்து, 7,500 ரூபாயாக உயர்த்தவேண்டும் என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும் என்றும் இந்த கமிட்டி கேட்டுக்கொண்டுள்ளது. இதனுடன், 4 அக்டோபர் 2016 மற்றும் 4 நவம்பர் 2022 அன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி உண்மையான சம்பளத்தில் ஓய்வூதியம் வழங்கவும் குழு கோரியுள்ளது.
இபிஎஃப்ஓ சமீபத்திய அப்டேட்:
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஜூன் 26, 2023 -க்குள் தங்கள் முதலாளிகளுடன் இணைந்து விண்ணப்பிக்கலாம் என இரு நாட்களுக்கு முன்னர் இந்த அமைப்பு கூறியது. ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO -ன் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலில் அவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக, அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான கடைசி தேதி மே 3, 2023 ஆக இருந்தது. ஆனால், தற்போது EPFO இந்த கடைசி தேதியை ஜூன் 26, 2023 வரை நீட்டித்துள்ளது. இதுவரை, EPFO-க்கு 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க, ஒரு தகுதியான ஊழியர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களில், வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஓய்வூதிய நிதிக்கு நிதியை மாற்ற அனுமதிக்கும் ஒப்பந்தம், நிலையான ஊதிய உச்சவரம்பான ரூ.5,000/ ரூ.6,500 -ஐத் தாண்டி அதிக ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதியில் முதலாளியின் பங்குக்கான சான்று ஆகியவை அடங்கும். மற்றும் எதிர்காலத்தில் உண்மையான ஊதியத்தில் 8.33% வரை EPS க்கு அதிக பங்களிப்பிற்காக முதலாளி / நிறுவனம் மற்றும் பணியாளரின் அறிவிப்புடன் கூடிய கூட்டு விருப்ப படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | EPFO Rules: திருமணத்துக்கு பிஎப் தொகையை எடுக்கிறீர்களா? இதை தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ