வறட்டு இருமல் பிரச்சனையா? உடனடி தீர்வு பெற எளிமையான 5 வழிகள்!

Dry Cough Home Remedies : நம்மில் பலருக்கு, வானிலை மாற்றம் ஏற்படும் போது, உடல் நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். அப்போது, வறட்டு இருமலும் கூடவே சேர்ந்து தொற்றிக்கொள்ளும்.   

Written by - Yuvashree | Last Updated : Dec 8, 2024, 02:26 PM IST
  • வறட்டு இருமலை சரிசெய்ய டிப்ஸ்
  • ஹெர்பல் டீ குடிக்க வேண்டும்
  • வேறு என்ன செய்ய வேண்டும்?
வறட்டு இருமல் பிரச்சனையா? உடனடி தீர்வு பெற எளிமையான 5 வழிகள்! title=

Dry Cough Home Remedies : குளிர் காலம் வந்துவிட்டால், ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு சோகமாகவும் இருக்கும். மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம், வெயில் குறைவாக இருக்கும். சோகமாக இருப்பதற்கு காரணம், சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

வறட்டு இருமல்:

காய்ச்சல் வந்தால் கூட, ஓரிரண்டு நாட்களில் போய் விடும். ஆனால், சளி-இருமல் வந்துவிட்டால் அழையா விருந்தாளி போல, அது விருப்பப்படும் போதுதான் போகும். ஒரு சிலருக்கு வந்துவிட்டல் திரும்ப போகாத ஒரு பாதிப்பு, வறட்டு இருமல். பொதுவாகவே குளிர்காலத்தில் பலர் இதனை எதிர்கொள்வர். தொண்டையில் அடைத்திருக்கும் சளி, எரிச்சலை ஏற்படுத்தி, இருமல் வரச்செய்யும். இதை சரிசெய்ய நாம் எதுவும் செய்யவில்லை என்றால், இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக இல்லை என்றாலும் கூட, நமக்கு எரிச்சலை ஏற்படுத்துவதாக இருக்கும். இதனால் தூக்கம் கெட்டு போகலாம், தொண்டை புண் ஆகலாம். இதை சரிசெய்ய 5 எளிமையான வழிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா? 

தேன்-வெந்நீர்:

தேன், உடல் நலக்கோளாறுகளை குணப்படுத்தும் இயற்கை மருந்தாக பார்க்கப்படுகிறது. இதனை, நன்றாக வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இது, தொண்டைக்கு இதமாக இருப்பதுடன் வறட்டு இருமலையும் சரிசெய்யலாம். 

வேதி பிடிப்பது:

தலை வலி, இருமல், தலையில் நீர் கோர்த்திருப்பதை எடுக்க வேதி பிடிக்கலாம். இது, வறட்டு இருமலையும் சரிசெய்ய உதவுகிறது. ஒரு சிலருக்கு காற்று மாசுபட்டு இருப்பதாலும், காய்ந்து போய் இருப்பதாலும், வறட்டு இருமல் வரலாம். எனவே, இதை சரிசெய்ய வேதி பிடிக்கலாம். தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் வேதி மாத்திரை, சில மூலிகைகள், யூகலிப்டஸ் தைலம் ஆகியவற்றை சேர்த்து வேதி பிடிக்கலாம். 

உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது:

உப்பு தண்ணீர், நோய் தொற்றுகளை குறைக்க,  தடுக்க உதவுகிறது. இது, வறட்டு இருமலை தடுக்கவும் உதவும். தொண்டை வலி, தொண்டை கரகரப்பு, வறட்டு இருமல் ஆகியவற்றை சரிசெய்ய, சுடு தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து துப்ப வேண்டும். இது தொண்டை எரிச்சலை சரி செய்து, உள்ளுக்குள் இருக்கும் வீக்கத்தையும் குறைக்கும். இதனால், வறட்டு இருமல் மற்றும் சளி பிரச்சனை சரியாகும்.

மேலும் படிக்க | ரொம்ப செலவு பண்றீங்களா? அதை குறைக்க எளிதான 6 டிப்ஸ்!

இஞ்சி டீ:

இஞ்சியில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடன்ஸ்கள் உடலில் இருக்கும் நோய் தொற்றை பரவ வைக்கும் வாயுக்களை தடுக்கும். இதனால், நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரித்து, உடல் குணமாகும். தொண்டை வலி இருப்பவர்கள், தொண்டை புண் இருப்பவர்கள், வறட்டு இருமல் மற்றும் சளி இருமல் இருப்பவர்களும் இதனை செய்யலாம். 

ஹெர்பல் டீ:

ஹெர்பல் டீ, நம் தொண்டை புண்ணை சரி செய்ய உதவும். இதனுடன் சேர்த்து மார்ஷ்மெலோ, அதிமதுரம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால், உடல் அழற்சி குறையும். வறட்டு இருமல் பிரச்சனை இருப்பவர்கள், சளி-இருமல் பிரச்சனை இருப்பவர்கள், பொதுவாக தொண்டை பிரச்சனை இருப்பவர்கள், இந்த டீயை குடிக்கலாம். 

மேலும் படிக்க | தினசரி பட்ஸ் பயன்படுத்துபவரா நீங்கள்? மருத்துவர்கள் எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News