தீவிரமாகும் கொரோனா தொற்று... தாக்குப்பிடிக்குமா தமிழகம்...

கொரோனா பாதிப்பு குறித்து பதற்றம் வேண்டாம்.... நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்...!

Written by - Devaki J | Last Updated : Mar 24, 2020, 01:04 PM IST
தீவிரமாகும் கொரோனா தொற்று... தாக்குப்பிடிக்குமா தமிழகம்... title=

கொரோனா பாதிப்பு குறித்து பதற்றம் வேண்டாம்.... நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்...!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், இந்த சூழலில் தனிமைப்படுத்தல் அவசியம் என்ற நிலைமையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளையும் அடைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் பொது இடங்களில் நடமாடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்கிற அரசின் வேண்டுகோளை கடைபிடிக்காவிட்டால் கொரோனா நிலைமை இன்னும் தீவிரமாக வாய்ப்புள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தான் கொரோனா தொற்று ஏற்படும் என நீங்கள் நினைக்தால் அது முற்றிலும் தவறு. நாம் வெளியில் நடமாடும் போது கூட மற்றவரிடம் இருந்து நமக்கு பரவும் அபாயம் உள்ளது. பொதுவாக, மக்கள் கூட்டமாக கூடுவதால் தான் கொரோனா வேகமாக பரவும் என்பதால் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டியது முக்கியம்.

கொரோனா பீதியால் பலரும் செய்யும் பெரிய தவறு என்ன என்றால்.... நாம் வெளிமாநிலம் அல்லது மாவட்டத்தில் வேலை செய்கிறோம் என அவாதி அவதியாக நமது வீட்டை நோக்கி பயணிப்பது. பயம் வேண்டாம், நாம் எங்கு வேலை பார்த்தாலும் சரி, அமைதியாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருங்கள். இப்படி நாம் பயணிப்பதால் நம்மை அறியாமல் கொரோனா தொற்று உடையவர்களிடம் இருந்து நமக்கும் பரவ நூறு சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. பொறுமையாக சிந்தியுங்கள்.... முடிந்தவரை இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருங்கள். நம்மை போன்று அனைவரும் கொரோனா பயத்தில் தனது சொந்த ஊருக்கு போகவேண்டும் என நினைப்பார்கள். அவர்கள் அனைவரும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தை நோக்கி கோட்டமாக திரண்டால்... நிலைமையை பற்று கொஞ்சம் சிந்தியுங்கல். 

இத்தாலியில் கொரோனாவால் மக்கள் கொத்து கொத்தாக இறந்தனர். அரசு வீட்டை வெட்டு வெளியில் வராதீர்கள் என உத்தரவிட்டும், மக்கள் சிறிது கூட அதற்க்கு செவி சாய்க்கவில்லை. இதன், பின் விளைவு சீனாவில் ஏற்பட்டத்தை விட உயிர்பலி இத்தாலியில் தான் அதிகம். தற்போது, இத்தாலியில் வீட்டை விட்டு யாரும் நடமாட கூடாது எனவும் அப்படி மீறி நடமாடினால் அவரலை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கவும் அரசு உத்தரவுட்டுள்ளது. இந்த நிலை நமது நாட்டிற்கு தேவையா..?.. 

நம்மை பாதுகாக்க நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அச்சம் வேண்டாம்... நாம் அதை பின்பற்றினால் மட்டும் போதும். நமக்கு அன்றாடம் தேவைப்படும் மாளிகை, காய்கறி கடை மற்றும் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிக மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டும் . அத்தியாவசியம் என பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் ஒருவருக்கு ஒருவர் 6 அடி தள்ளி நிற்க வேண்டியது கட்டாயம். முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருங்கல், வெளியில் சென்று வந்தாக் மீண்டும் குளியுங்கள். வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுங்ககள். போதும் விளிப்புணர்வுடன் இருங்கள். 

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யபட்டுள்ளாதால்,  தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 12 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அதில், சென்னையில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் இருவருக்கும், ஈரோட்டில் 2 பேருக்கும், மதுரையில் ஒருவருக்கும் உள்ள நிலையில், தற்போது புதிய மூன்று நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  

Trending News