காதலால் கசிந்துருகும் பெண்களுக்கு மருதாணி சிவக்குமா? @Mehndi

மருதாணி என்றாலே அனைவரின் மனம் மயங்கும். மயிலாஞ்சி, மருதோன்றி என பல பெயர்களில் அறியப்படும் மருதாணி ஒரு அழகுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்தவை. 

Written by - Malathi Tamilselvan | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 3, 2020, 07:32 PM IST
  • மருதாணி நன்றாக சிவந்தால் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு அதிகம் இருக்கும் என்பது நம்பிக்கை
  • உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது மருதாணி
  • சீதையின் மனதை குளிர்வித்து வரம் பெற்றது மருதாணி
  • மூலிகையான மருதாணியை ஆண்களும் கைகளில் இட்டுக் கொண்டிருந்த பழக்கம் மறைந்து, மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது
காதலால் கசிந்துருகும் பெண்களுக்கு மருதாணி சிவக்குமா? @Mehndi title=

மருதாணி என்றாலே அனைவரின் மனம் மயங்கும். மயிலாஞ்சி, மருதோன்றி என பல பெயர்களில் அறியப்படும் மருதாணி ஒரு அழகுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்தவை. 
ஒரு பெண்ணின் கையில் இடும் மருதானி விரைவில் சிவந்துவிட்டால், அந்த மங்கையின் மணாளன் மனைவியின் மேல் அதீத காதலுடன் இருப்பான் என்று நம்பிக்கை உண்டு. அதுமட்டுமல்ல, மருதாணி நன்றாக சிவந்தால், அந்தப் பெண் கணவனுடன் பாலியல் வாழ்க்கையில் ஈடு கொடுப்பார் என்பதும் நம்பிக்கை. அதனால் தான், திருமணங்களில் மருதாணிக்கு என ஒரு தனி இடம் உண்டு. 
திருமணங்களில் தற்போது மெஹந்தி விழா என்று மருதாணி போடும் ஒரு சடங்கிற்கும் தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.  
மருதாணி நன்றாக சிவந்தால், அந்தப் பெண்ணுக்கு பிரசவம் இயல்பாக இருக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மருதாணியின் சிவப்பு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். வேறுபட்டாலும் மருதாணியின் சிவப்பு மனம் மயக்கும். மருதோன்றியின் நிறத்தை வைத்தே, அதை இட்டுக் கொண்டவரின் உடல் வாத உடலா, பித்த உடலா என்பதை சுலபமாக சொல்லிவிட முடியும். 
அழகுக்கு அழகு சேர்க்கும் மருதாணி பெண்களின் கைக்கு மட்டுமல்ல, நரையை மறைக்கும் சாயமாகவும், கூந்தலின் நிறத்தை மாற்றும் அழகு சாதன பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. 
பெண்களின் தாம்பத்ய வாழ்க்கைக்கு மெருகூட்டும் என்பது மருதாணியின் கவர்ச்சிக்கு முக்கியமான விஷயம்.
மூன்றாவதாக, மருத்துவ குணங்களை கொண்ட மருதாணி துளசியைப்போன்று தெய்வீக மூலிகையாகவும் போற்றப்படுகிறது. 
அசோகமரம், மருதாணியின் வகை என்ற நம்பிக்கையும் உண்டு. இதன் அடிப்படையில் தான், ராவணன் சீதையை கடத்திக் கொண்டு போய் சிறை வைத்திருந்த இடத்தில் மருதாணி மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. காதல் மணம் நிறைந்த மருதாணி வனத்தில் இருந்தால், அந்த மணம், மனதில் அன்பைத் தூண்டி, சீதையின் அன்பை தன் பக்கம் திருப்பும் என்று எண்ணியே அசோகவனத்தில்  சீதையை சிறை வைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. 

இதையும் படியுங்கள் | காஜல் அகர்வாலின் மனம்கவர் கள்வன் கெளதம் கிச்லுவின் காதல் கதை தெரியுமா?

ஆனால், சீதை இலங்கையில் அசோகவனத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது, மருதாணி தனது கிளைகளை அசைத்து ஆறுதல் கூறியதாகவும், தன்னுடைய மனதிற்கு ஆறுதல் அளித்த மருதாணி மரத்திற்கு சீதை வரம் கொடுத்ததாகவும் நம்பிக்கை உண்டு.
எனக்கு ஆறுதல் அளித்த உன்னை பூஜிப்பவர்களுக்கும்,, தண்ணீர் ஊற்றுபவர்களுக்கும், மருதாணி இலைகளை சாப்பிடுபவர்களுக்கும், மருதாணியை ,கையில் பூசி கொள்பவர்ககும் ஒருபோதும் துன்பம் வராது என்று ராமனின் மனைவி சீதை வரம் கொடுத்தார். அதன்பிறகு தான், திருமணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.  
மருதாணி தற்போது டாட்டூவைப் போன்றும் போடப்படுகிறது. ஆனால், ரசாயனங்கள் கலந்த மருதாணியை பூசுவதால் எந்தப் பயனும் இல்லை. அதுவொரு அழகுசாதன பொருளாகவே பார்க்கப்படும்.  மருதாணியை அதன் தன்மை கெடாமல் பயன்படுத்தி பல்வேறு பயன்களைப் பெறலாம்.

Read Also | ‘Despacito’ வை ஓவர்டேக் செய்து 7 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த ‘Baby Shark’ YouTube வீடியோ 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News