Lifestyle Tips In Tamil: குடும்பம் என்பது பெற்றோர், குழந்தைகள் என ஒவ்வொரு உறுப்பினரும் சேர்ந்ததுதான். அந்த குடும்பம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கு வெறும் ஒற்றை மனிதரின் விருப்பமோ அல்லது தேர்வோ மட்டும் இருக்கக் கூடாது. நிச்சயம் ஒவ்வொரு உறுப்பினர்களும் குடும்ப விவகாரங்களில் தலையீடும் ஒருவராக இருக்க வேண்டும். வயதில் சிறியவராக இருந்தாலும் உங்களின் எண்ணங்களை பகிர்வதற்கான ஸ்பேஸ் குடும்பங்களுக்குள் கொடுக்கப்பட வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே அந்த குடும்பத்தில் பிரச்னைகளில் இருந்தும், தகராறுகளில் இருந்தும் தப்பிக்கும்.
முந்தைய காலகட்டங்களில் குடும்பத்தில் ஒரு ஆண் அல்லது ஆண்கள் வேலைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பணத்தை சம்பாதித்து கொண்டு வருவார்கள். பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளை செய்பவராகவும், பிள்ளைகளை பார்த்துக்கொள்பவராகவுமே இருந்து வந்தனர். மேலும் வீட்டில் சிறு சிறு வேலைகளை செய்து அதில் இருந்து சிறு வருமானத்தை பெறுவார்கள். எங்கள் ஊரில் வீட்டில் இருக்கும் பெண்கள் பெரும்பாலும் பீடி சுற்றும் தொழிலை பார்ப்பார்கள். பீடி சுற்றியே தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்த பெண்களையும் நான் தனிப்பட்ட ரீதியில் பார்த்திருக்கிறேன்.
நிதி ரீதியிலான பங்களிப்பு
இன்றைய காலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. இப்போது கணவன் மட்டுமில்லை மனைவியும் வேலைக்குச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. மதுரை, திருச்சி, நெல்லை ஆகிய இரண்டாம் கட்ட நகரங்களிலேயே இந்த நிலைமை இருக்கிறது, சென்னை குறித்து நான் சொல்ல வேண்டிய தேவை இருக்காது. இப்போது கணவன் - மனைவி இருவரும் சம்பாதித்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்பது ஒருபுறம் இருந்தாலும், ஆண் - பெண் சமத்துவம் ஓரளவுக்கு சமுதாயத்தில் நிலவுகிறது என்பதையும் நாம் பார்க்கலாம்.
மேலும் படிக்க | குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!
அதாவது முன்பு வீட்டில் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றால் பெரும்பாலும் பணம் சம்பாதிக்கும் ஆண் மட்டுமே தனிச்சையாக செயல்படுவார்கள். ஆனால், இன்று கணவன் - மனைவி சேர்ந்து முடிவுகளை எடுப்பது ஆரோக்கியமான போக்காகும். குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பங்களிப்பு என்பது பெண்களுக்கு தனி நம்பிக்கையை தரும். அந்த வகையில், அத்தகைய பெண்களுக்கு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதா மூர்த்தி கூறும் அறிவுரையை இங்கு காணலாம்.
ரகசியமாக சேமிக்கவும்...
சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தொலைக்காட்சி தொடரான கபில் சர்மா ஷோ என்ற நிகழ்ச்சியில் சுதா மூர்த்தி பங்கேற்ற போது இந்த கருத்தை தெரிவித்தார். அதில், அவரின் கணவர் நிறுவனத்தை தொடங்க திட்டமிடும்போது அவரிடம் தேவையான பணம் இல்லை என்ற சூழல் வந்தது. சுதா மூர்த்திதான் தன்னுடைய வீட்டுச் செலவுக்கு கிடைத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த சேமிப்பு பணத்தை கொடுத்து உதவியதாக தெரிவித்தார்.
மேலும், இந்த நிகழ்வை விவரிக்கும் போது அவர் பார்வையாளர் பிரிவில் அமர்ந்திருந்த ஒவ்வொரு பெண்களிடம் இந்த அறிவுரையை கூறினார். "அதில் மகளிர் அனைவரும் தங்களின் கணவனுக்கு தெரியாமால் கொஞ்சம் பணத்தை சேமித்து வைக்க வேண்டும்" என தெரிவித்தார். மேலும் இந்த சேமிப்பு பணத்தை குறித்து கணவனிடம் மட்டுமின்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என்றும் அந்த பணம் குறித்து நீங்களே பல சமயங்களில் மறந்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பணிக்குச் செல்லாத பெண்ணாக இருக்கும்பட்சத்தில் வீட்டுச் செலவுக்கு கொடுக்கப்படும் பணத்தை சேமித்து வைக்கவும் அறிவுறுத்தினார். குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பங்களிப்பு என்பது அவசியம் என்றாலும் பணிக்குச் செல்லாவிட்டாலும் அதனை செய்யலாம். அதுவும் குறைந்த வருமானம் வந்தாலும் அதில் சிக்கனம் செய்து பணத்தை சேமிக்கவும் அதிக திறமை வேண்டும் என்றும் சுதா மூர்த்தி தெரிவித்தார்.
மேலும் படிக்க | Skin Care: பளபளப்பான சருமம் பெற செலவே இல்லாத பாட்டி வைத்தியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ