குளிர்காலம், பனிக்கலாம் மற்றும் மழையின் போது நமது துணிகளை காயவைப்பது மிகவும் சிரம மாகிறது. துவைத்த துணிகள் காய்வதற்கு 2 முதல் 3 நாட்கள் எடுத்து கொள்ளும். இந்த சயமங்களில் வாஷிங் மிசின்கள் உதிவிகரமாக இருக்கும். தற்போது வாஷிங் மிசின் பயன்பாடு அதிகமாகி உள்ளது. கிட்டத்தட்ட அனைவரது வீடுகளிலும் வாஷிங் மிசின் ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது. இந்நிலையில், நாம் அடிக்கடி பயன்படுத்துவதாலும் அதில் சில பிரச்சனைகள் ஏற்படும். வாஷிங் மிசின் பயன்படுத்தும் போது செய்ய கூடாத தவறுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
துணிகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும்
ஒவ்வொரு துணிக்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. அதற்கேற்றபடி துவைக் வேண்டும். துணிகள் மிகவும் அழுக்காக இல்லாவிட்டால் வெப்பநிலையை குறைந்த அளவு பயன்படுத்துவது நல்லது. உள்ளாடைகள் மற்றும் துண்டுகள் போன்ற பொருட்களில் அதிக பாக்டீரியா இருக்கும். அவற்றை சுத்தம் செய்ய குறைந்தபட்சம் 60 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது. மற்ற துணிகளுக்கு 20 முதல் 30 டிகிரி வெப்பநிலை இருந்தால் போதுமானது.
துணிகளுக்கான லிக்குவிட்
துணி துவைக்கும் பவுடர் அல்லது லிக்குவிட் தூள் இரண்டும் அவற்றின் நன்மைகளைக கொண்டுள்ளது. துணி துவைக்கும் பவுடரில் பெரும்பாலும் ப்ளீச் உள்ளது. இவை வெள்ளை ஆடைகளுக்கு சிறந்தது, அதே நேரத்தில் லிக்குவிட் வண்ணங்கள் நிறைந்த ஆடைகளுக்கு சிறந்தது. துணிகளில் அதிகம் சாயம் போகாமல் இருக்க துணிகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும்.
துணியில் ஜிப், பட்டன்கள் இருந்தால் கவனம்
துணிகளை துவைக்க மிஷினில் போடுவதற்கு முன்பு அவற்றில் அதிக ஜிப் மற்றும் பட்டன்கள் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும். பட்டன்கள் மிஷனில் சிக்க வாய்ப்பு உண்டு அல்லது மற்ற துணிகளில் சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே மற்ற துணிகளை சேதப்படுத்தாமல் இருக்க ஜீன்ஸ் துணிகளை மினிஷில் போடும் போது மென்மையான துணிகளை சேர்த்து போடாமல் இருப்பது நல்லது.
அதிகப்படியான கறை
துணிகளில் அதிகப்படியான கறைகள் இருந்தால் மினிஷில் போடுவதற்கு முன்பு கைகளால் முடிந்தவரை நீக்க முயற்சி செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் துணிகளில் உள்ள அழுக்கு சரியாகிறது மற்றும் கறை நிரந்தரமாக இருக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது.
வாஷிங் மெஷினை பராமரிக்கவும்
உங்கள் வாஷிங் மிஷினின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், மின்சார உபயோகத்தை குறைக்கவும் வருடத்திற்கு இரண்டு முறை தவறாமல் சர்வீஸ் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை வாஷிங் மிஷினை பயன்படுத்திய பிறகும் அதற்குள் இருக்கும் வெப்பம் வெளியேறுவதை உறுதி செய்யுங்கள்.
பெட்சீட் மற்றும் தலையணைகளை துவைக்கவும்
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை பெட்ஜீட் மற்றும் தலையணைகள் துவைக்கவும். இவை உங்களின் உடல் சுத்தத்திற்கு முக்கியம். மேலும் மெத்தை வருடத்திற்கு நான்கு முறையாவது கழுவ வேண்டும். மொத்த அழுக்குடன் வாஷிங் மினிஷில் போடுவது துணிகளுக்கு, மிசினிற்கும், உங்களுக்கும் ஆபத்து.
வாஷிங் மிசின் ட்ரையர்
ட்ரையரை துணிகளுக்கு அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது துணிகளின் ஆயுள் காலத்தை அதிகப்படுத்தும். அடிக்கடி ட்ரையர் பயன்படுத்தினால் துணியின் தன்மை பாதிக்கும்.
மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ