தமிழ் முறைப்படி, வாரத்தின் முக்கிய நாளாக கருதப்படுகிறது, சனிக்கிழமை. கர்ம வினைகள், நீதி மற்றும் நியாத்தின் அதிபதி என்று புகழப்படும் சனிஸ்வர பகவானுக்கு உகந்த நாள்தான் சனிக்கிழமை. ஆன்மிகத்தின் கூற்றுப்படி ஒரு சில காரியங்களை சனிக்கிழமையன்று செய்வதை தவிர்க்க வேண்டும். ‘அந்த’ காரியங்களை செய்தால் சனிஸ்வரரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஆன்மிக கூற்றுகளில் எழுதப்பட்டிருக்கின்றன. அவை என்னென்ன காரியங்கள்? அவற்றை செய்தால் என்ன நடக்கும்? இங்கே பார்ப்போம்.
1.‘இவற்றை’ வாங்கவே கூடாது..!
சனிக்கிழமைகளில் வாங்க கூடாத பொருட்கள் என்று சில இருக்கின்றன. நிலக்கரி சம்பந்தப்பட்ட பொருட்களையோ, அதனால் செய்யப்பட்ட பொருட்களையோ சனிக்கிழமைகளில் வாங்கவே கூடாதாம். அதே போல உப்பு, மரக்கட்டை, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்கி விடவெ கூடாது. இவற்றை சனிக்கிழமையில் வாங்குவதை தவிர்ப்பதால் வாழ்வில் வரும் சிரமங்களையும், விரும்பத்தகாத பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். துடைப்பம், கருப்பு ஷூக்கள், பேனா மற்றும் பேப்பர் போன்றவற்றையும் சனிக்கிழமைகளில் வாங்குவதை தவிர்க்க வேண்டுமாம். மேலும், எண்ணெய் சார்ந்த பொருட்களையோ, தோல் (Leather) சார்ந்த பொருட்களையோ சனிக்கிழமைகளில் வாங்குவதால், கடன் சுமை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
2.‘இந்த’ திசைகளில் பயணம் மேற்கொள்ள கூடாது!
சனிக்கிழமையன்று சில திசைகளில் பயணம் மேற்கொள்ள கூடாது. வடக்கு, கிழக்கு அல்லது வடக்கிழக்கு திசைகளில் இருக்கும் நகரங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ சனிக்கிழமைகளில் பயணம் மேற்கொள்ள கூடாதாம். ஆன்மிகத்தின் படி, இந்த திசைகளில் பயணம் செய்பவர்கள், பயணத்தை மேற்கொள்ளும் முன்னர் இஞ்சி சாப்பிட்டு விட்டு எந்த திசையில் பயணிக்க உள்ளார்களோ அதற்கு எதிர் திசையில் 5 அடி எடுத்து வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
3.‘இதை’செய்வதில் இருந்து தவிர்க்கவும்:
திருமணம் ஆன பெண்கள், தங்களது கணவர் வழி உறவினர்களின் வீடுகளுக்கு சனிக்கிழமைகளில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனால் மாமியார், நாத்தனார் போன்ற உறவுகளிடம் சண்டை வருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது. சனிக்கிழமைகளில் இவர்களின் வீடுகளுக்கு செல்வதால், இவர்களுக்கு இடையே உள்ள உறவு பலவீனம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
4.‘இவற்றை’சாப்பிடக்கூடாது:
சனிக்கிழமைகளில் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பால், தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், சனிக்கிழமைகளில் தவிர்க்க வேண்டிய உணவுகளுக்குள் அடங்கும். அதையும் மீறி, யாரேனும் சனிக்கிழமைகளில் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டால் மஞ்சள் அல்லது நாட்டு சர்க்கரை ஆகியவற்றை தங்களது உணவுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சிகப்பு மிளகு, மாங்காய் ஊறுகாய் மற்றும் கத்திரிக்காய் போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
5. குடிப்பழக்கம் கூடாது!
சனிக்கிழமைகளில் கண்டிப்பாக மது அருந்த கூடாது என கூறப்படுகிறது. இந்த நாளில் கண்டிப்பாக அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும் என்று ஆன்மிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, நம் வாழ்வில் நாமே பல பிரச்சனைகளை வரவேற்க காரணமாகி விடும் என்று நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் இதை சாப்பிடுவோருக்கும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பல பிரச்சனைகள் உண்டாகுமாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ