கேரளாவில் வைரலாகும் ஆபத்தான 'நில்லு நில்லு சேலஞ்ச்'.......

கேரளா இளைஞர்களிடையே வைரலாகும் ஆபத்தான 'நில்லு நில்லு சேலஞ்ச்'; கடுமையாக எச்சரிக்கும் காவல்துறையினர்! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2018, 11:09 AM IST
கேரளாவில் வைரலாகும் ஆபத்தான 'நில்லு நில்லு சேலஞ்ச்'....... title=

கேரளா இளைஞர்களிடையே வைரலாகும் ஆபத்தான 'நில்லு நில்லு சேலஞ்ச்'; கடுமையாக எச்சரிக்கும் காவல்துறையினர்! 

தற்போதைய இணையவாசிகல் அமைவரும் மற்றவருக்கு Challenge விடுவதையே பெரிய பொழுதுபோக்காக வைத்துள்ளனர். தங்களுக்கு பிடித்த அல்லது அபிமான விளையாட்டுகளை ஊடகங்களில் சவாலாக பதிவிட்டு அந்த வீடியோக்களை வைரலாக்கி வருகின்றனர். 

என்னக்கு தெரிந்தவரை இந்த சவால் பிட்னெஸ் சவாலில் ஆரம்பித்து Kiki சவால், Momo சவால், EatTheBean சவால், மேரி பாபின்ஸ் சவால் என பல சவால்களை தொடர்ந்து தற்போது ஸ்னூட் சவால் என புதியவகை சாலன்ஜ்-யை கண்டுபிடித்துள்ளனர். 

இந்நிலையில், கேரளா இளைஞர்களிடம் வைரளாகி வருகிறது "நில்லு நில்லு" என்ற புதிய சவால். இந்த சவால் கேரள மாநில காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது, இந்த சவால். பொது மக்களும், வாகன ஓட்டிகளும், இதனால் பீதி அடைந்து வருகின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு, "Rain Rain Come Again" என்ற மலையாள படம் வெளியானது. இந்த படத்தில் 'நில்லு நில்லு' என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி, 14 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த பாடல் பிரபலமாகி வருகிறது. 

இப்பாடலுக்கு தான், கேரள மக்கள் 'நில்லு நில்லு சேலஞ்ச்' மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, வாகனத்தில் செல்பவர்களை இடையில் மறிக்கும் நான்கைந்து பேர் கொண்ட கும்பல், அவர்களின் முன்னால் 'நில்லு நில்லு' பாடலுக்கு நடனமாடுகின்றனர். கையில் இலைகள் அல்லது தலையில் ஹெல்மெட்டை அணிந்தபடி அவர்கள் நடனமாடுகின்றனர். தனியாகச் செல்பவர்களையும் விட்டு வைப்பதில்லை...

நடிகர் விஷ்ணு உன்னி கிருஷ்ணன், தமது படத்திற்காக மற்றொரு நடிகருடன் இணைந்து இதுபோன்று நடனமாடியிருந்தார். இந்த வீடியோவைத் தொடர்ந்தே இந்த சவால் பிரபலமாகி வருகிறது. இதுபோன்ற விபரீதத்தில் ஈடுபட வேண்டாம் என கேரள காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வீடியோ மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.  

 

Trending News