கொரோனாவும் இந்திய மருத்துவர்களும்... கண்ணீரும் தன்னம்பிக்கையும்.. ஒரு அலசல்..!!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரசுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பல்வேறு மருத்துவமனைகளில் கடமைச் செய்யும் மருத்துவர்களை எண்ணிப் பார்த்தால், "உண்மையில் அவர்கள் கடவுள்" என்று எண்ணத்தோன்றும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 17, 2020, 11:16 PM IST
  • கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
  • மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ளனர்.
  • அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தும் டாக்டர்களின் கதைகள் உள்ளன.
  • மருத்துவர்களை எண்ணிப் பார்த்தால், "உண்மையில் அவர்கள் கடவுள்" என்று எண்ணத்தோன்றும்.
  • மருத்துவர்கள் கொரோனா வைரஸ் வார்டில் இருக்கும்போது தண்ணீர் குடிக்கவோ கழிப்பறைக்கு செல்லவோ முடியாது.
கொரோனாவும் இந்திய மருத்துவர்களும்... கண்ணீரும் தன்னம்பிக்கையும்.. ஒரு அலசல்..!! title=

புது டெல்லி: முழு உலகமும் ஒரு கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்கொள்கிறது. இந்த நெருக்கடியிலிருந்து இந்தியாவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்து வருகிறது. வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களைப் பாதுகாக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களைக் காப்பாற்ற, மருத்துவர்கள் தங்கள் வாழ்க்கையை மரணத்தின் பிடியில் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கிறார்கள். இந்த கடினமான சூழ்நிலையில் நமது நாட்டு மருத்துவர்களும் உயிர் இழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில், கொரோனா வைரஸ் வைரஸ் தொற்று காரணமாக இரண்டு மருத்துவர்கள் இறந்துள்ளனர். அதே நேரத்தில், நாட்டின் பல மருத்துவமனைகளில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் மீறி, மக்கள் டாக்டர்களுடன் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் செய்திகள் வந்துள்ளன. 

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரசுக்கு மத்தியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், பல்வேறு மருத்துவமனைகளில் கடமைச் செய்யும் மருத்துவர்களை எண்ணிப் பார்த்தால், "உண்மையில் அவர்கள் கடவுள்" என்று எண்ணத்தோன்றும்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது டாக்டர்களுக்கு எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியை தியாகம் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் சமூக ஊடகங்களில் பல புகைப்படங்களை பார்த்து இருப்பீர்கள். அதில் மருத்துவர்கள் தங்கள் குழந்தைகளிடம் கூட நெருங்க முடியாமல், வீட்டின் வெளியில் உட்கார்ந்துக் கொண்டு உணவு உண்பது, வீட்டுக்கு சென்றவுடன் அவர்களை அணைக்க முடியாமல் இருப்பதும் போன்ற காட்சிகளை பார்த்தோம்.

மருத்துவர்கள் கொரோனா வைரஸ் வார்டில் இருக்கும்போது தண்ணீர் குடிக்கவோ கழிப்பறைக்கு செல்லவோ முடியாது. ஒருவர் வார்டுக்கு பாதுகாப்பு தனிப்பட்ட உபகரணங்களை (பிபிஇ) அணிய வேண்டும். பிபிஇ அணிந்த பிறகும் தண்ணீர் குடிக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஒரு குற்றம் செய்து கைதாகி சிறைக்கு செல்லும் எந்தவொரு கைதிக்கும் இவ்வளவு வலி கொடுக்கப்படுவதில்லை. ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள்.. ஆனால் கொரோனாவிலிருந்து மக்களின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர்கள் இந்த வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

பல நாட்களாக குடும்ப உறுப்பினர்களை கூட மருத்துவர்கள் சந்திக்கவில்லை. அவர்களின் உணர்ச்சியை பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மக்களின் உயிரைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பல முக்கியமான தருணங்களை தியாகம் செய்கிறார்கள்.

சற்று யோசித்துப் பாருங்கள், உங்கள் மகளுக்கு பிறந்த நாள், அவள் கேக் வெட்டி கொண்டாடுகிறார். ஆனால் மகளின் அருகில் நீங்கள் செல்ல முடியாது. நீங்கள் உங்கள் மகளிலிருந்து சில படிகள் தொலைவில் இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அவளைத் தொட முடியாது. அதுவும் அவளது பிறந்த நாள் போன்ற ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில். ஒரு தந்தைக்கு என்ன ஒரு வேதனையான தருணம். கொரோனா வைரஸ் காரணமாக, பல மருத்துவர்களுக்கு இப்படி தான் நடக்கிறது. 

பல குழந்தைகள் தாய், தந்தையுடன் பேச விரும்புகிறார்கள். அவர்களை பார்க்க வீட்டுக்கு அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள் செல்ல முடியாது. மருத்துவர்கள் விரும்பிய பிறகும் குழந்தைகளைச் சந்திக்க செல்ல முடியாது. வீடியோ அழைப்பில் பேசி தனது குழந்தைகளுக்கு விளக்குகிறார். இது எப்படியான ஒரு வலி. 

நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஈடுபட்டுள்ள இதுபோன்ற பல மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் கதை உள்ளது. இந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் குடும்பத்தை புறக்கணித்து, மக்காளி காப்பாற்றும் கடமையைச் செய்கிறார்கள். நாட்டு மக்களைக் காப்பாற்றும் பணியில், தங்களின் அன்புக்குரியவர்களையும் கவனித்துக் கொள்ள அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. டாக்டர்களும், மருத்துவ ஊழியர்களும் மக்கள் காப்பாற்ற போராடுவதை பார்த்தால், "உண்மையில் கடவுள் தான்" என்று தெரிகிறது.

Trending News