New Latest Smartphones On July 2024 In India: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒவ்வொரு மாதமும் புதுப்புது மொபைல்கள் களமிறங்குவது வாடிக்கையாகிவிட்டது. இந்த ஜூன் மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் வெளியாகி விற்பனைக்கு வந்திருந்த நிலையில் வரும் ஜூலை மாதமும் பல்வேறு நிறுவனங்களின் மொபைல்கள் அறிமுகமாக உள்ளன. அதிலும் சிறப்பான சில மொபைல்களும் லிஸ்டில் உள்ளன.
கடந்த மாதம் Xiaomi 14 CIVI, Motorola Edge 50 Ultra, OnePlus Nord 4 Series உள்ளிட்ட மொபைல்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தன. ஒவ்வொரு மாதமும் மொபைல்கள் அறிமுகமாவதும், விற்பனைக்கு வருவதும் வாடிக்கையாகிவிட்டதற்கு காரணம், இந்திய மொபைல் சந்தை என்பது உலகிலேயே இரண்டாவது பெரியதாகும். சீனாதான் மொபைல் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது.
எனவே, இந்தியாவில் விலை உயர்ந்த மொபைல்கள் முதல் பட்ஜெட் மொபைல்கள் வரை அறிமுகப்படுத்தும்போது அது பலதரப்பட்ட மக்களிடையே சென்றடைகிறது. மொபைல்கள் இப்போது அனைவருக்கும் அவசியமாகிவிட்டதால் தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்துகொண்டு சேவையாற்றி வருகின்றன.
மேலும் படிக்க | ஜியோவே மிரளும் வோடாஃபோன் ஐடியாவின் சூப்பர் ஓடிடி பிளான்..! 154 ரூபாய் போதும
அந்த வகையில், வரும் ஜூலை மாதத்தில் Nothing நிறுவனத்தின் துணை பிராண்டான CMF இந்தியாவில் முதல்முறையாக மொபைல் களமிறக்க உள்ளது. அதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Foldable Flip சீரிஸ் மொபைல்கள் ஜூலையில் தான் சந்தையை கலக்க வருகின்றன. இந்நிலையில், ஜூலை மாதத்தில் இந்தியாவில் அறிமுகாக உள்ள டாப் 4 மொபைல்களை இங்கு காணலாம்.
Redmi 13 5G
இந்தியாவில் வரும் ஜூலை மாதம்தான் வெளியாக உள்ளது. இதனை நீங்கள் அமேசான் மூலம் வாங்கலாம். ஜூலை 9ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. Redmi நிறுவனத்தின் மற்றுமொரு 5ஜி மொபைல்களாகும். இது கிறிஸ்டல் கிளாஸ் வடிவமைப்பில் வருகிரது. கொரில்லா கிளாஸ் 3 பாதுகப்பு அம்சம் டிஸ்ப்ளேவுக்கு வழங்கபட்டுள்ளது. இதில் Qualcomm Snapdragon 4 Gen 2 Processor இருக்கும். 108MP கேமரா கிடைக்க வாய்ப்புள்ளது.
Samsung Galaxy Z Fold 6 & Flip 6
சாம்சங்கள் நிறுவனம் இந்த இரண்டு சீரிஸ்களையும் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் Samsung Unpacked Event என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்த மொபைல்கள் மட்டுமின்றி, Galaxy Watch 7 சீரிஸ், Galaxy Ring, Galaxy Watch Ultra உள்ளிட்டவை அறிமுகமாகும். இதில் Galaxy AI அறிமுகப்படுத்தப்படலாம். மேலும் இது ஜூலை 10ஆம் தேதி 6.30 மணிக்கு தொடங்கும்.
Motorola Razr 50 Ultra
இந்த மொபைல் வரும் ஜூன் 4ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இதுதான் அந்த நிறுவனத்தின் விலை உயர்ந்த Flip டைப் மொபைல் ஆகும். இதில் MotoAI, Photomoji, Magic Canvas, Style Sync, Action Shot போன்ற அம்சங்களும் உள்ளன.
CMF Phone 1
Nothing நிறுவனத்தின் துணை பிராண்டான CMF போன் இந்தியாவில் ஒரு வழியாக அறிமுகமாகிறது. இந்த மொபைல் வரும் ஜூலை 8ஆம் தேதி அன்று வெளியாகிறது. CMF Pro 2, CMF Watch Pro 2 ஆகியவையும் அறிமுகமாகிறது. இந்த மொபைலில் MediaTek Dimensity 7300 பிராஸஸர் இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ