சமூக ஊடகங்களில் சக்கைபோடு போடும் ட்விட்டரில் சில தினங்களுக்கு முன்னதாகத்தான் பொறுப்பேற்றார் எலோன் மஸ்க். அதற்குள் அவர் 'கோகோ கோலா' நிறுவனத்தை வாங்க விரும்புகிறார் என்ற செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்காத ஒன்று.
இதற்கு காரணம் எலோன் மஸ்க் பிரபல தொழிலதிபர் மட்டுமல்ல, அடுத்து எதில் முதலீடு செய்தால் எதிர்காலத்திற்கு நல்லது என்று யோசித்து முடிவெடுத்து அதை உடனே செயல்படுத்தும் சிறந்த வியாபாரி என்று அறியப்படுகிறார்.
வியாழன் (2022, ஏப்ரல் 28) அன்று ட்வீட் செய்த அவர், கொக்கக் கோலாவை அடுத்து தான் வாங்குவதாக தெரிவித்துள்ளார்.
Next I’m buying Coca-Cola to put the cocaine back in
— Elon Musk (@elonmusk) April 28, 2022
அடுத்து கோகோ கோலா அப்புறம் என்ன மெக்டொனால்ட்சா என்று எலோன் மஸ்கை நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.
எது எப்படியிருந்தாலும் டுவிட்டரை தெறிக்கவிடுகிறார் எலன் மஸ்க் என்பதில் கொஞ்சம்கூட சந்தேகமில்லை.
டுவிட்டரை அதிகபட்ச மகிழ்ச்சி தரும் இடமாக மாற்றுவோம் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | எலான் மஸ்க் ட்விட்டருக்கு மிக பொருத்தமான நபர்: ஜாக் டார்ஸி
சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தனது அடுத்த இலக்கை தொழில்நுட்ப ஜாம்பவான் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
முன்னதாக, மஸ்க் மெக்டொனால்டு வாங்க விரும்புவதாக ட்வீட் செய்திருந்தார். அதில், 'அனைத்து ஐஸ்கிரீம் இயந்திரங்களையும் சரிசெய்வேன்' என்று பதிவிட்டிருந்தார். ஆனால், இன்று காலை, மஸ்க் தனது முந்தைய மெக்டொனால்டின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, "என்னால் அற்புதங்களைச் செய்ய முடியாது" என்று எழுதினார்.
Listen, I can’t do miracles ok pic.twitter.com/z7dvLMUXy8
— Elon Musk (@elonmusk) April 28, 2022
பில்லியனர் எலோன் மஸ்க் ட்விட்டரின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளது தொழில்நுட்ப உலகில் உலகின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் மஸ்க், சமூக வலைதளத்தை $54.20 மதிப்புள்ள பங்குகளை சுமார் $44 பில்லியனுக்கு வாங்கினார்.
மேலும் படிக்க | ட்விட்டரால் திசை மாறிய எலான் மஸ்க்..ஒரே நாளில் சரிந்த டெஸ்லா பங்குகள்
சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும், மேலும் ட்விட்டர் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் டவுன் சதுக்கமாகும்.
புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலமும், நம்பிக்கையை அதிகரிக்க அல்காரிதங்களை ஓப்பன் சோர்ஸாக மாற்றுவதன் மூலமும், ஸ்பேம் போட்களைத் தோற்கடிப்பதன் மூலமும், அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும் ட்விட்டரை முன்னெப்போதையும் விட சிறந்ததாக்க விரும்புகிறேன்.
ட்விட்டர் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது - அதைத் திறக்க நிறுவனம் மற்றும் பயனர்களின் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்,” என்று ட்விட்டரை வாங்கிய பிறகு மஸ்க் தனது ட்வீட்டில் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | ட்விட்டரின் எதிர்காலம் உறுதியற்றது..ஊழியர்களிடம் மனம் திறந்த பராக் அகர்வால்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR