அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், எல்பிஜி சிலிண்டரின் (LPG Cylinder) மானியம் தொடர்பாக மத்திய அரசு சில திட்டங்களை வகுத்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிலிண்டர் மானியம் தொடர்பாக அரசு சில திட்டங்களை பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சிலிண்டருக்கான மானியத்துக்கு உச்ச வரம்பு நிர்ணயிப்பது உட்பட பல விதமான மாற்று திட்டங்கள் அமல்படுத்தப்படும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் குறித்து மத்திய அரசு இரு வகையான பரிந்துரைகளை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. முதலில், அரசு மானியம் இல்லாமல் சிலிண்டர்களை விற்பனை செய்வது, இரண்டாவதாக, குறிப்பிட்ட அளவிலான வருமானத்திற்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டும் மானிய விலையில் சிலிண்டர் வழங்குவது ஆகிய இரு யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
அதிகார பூர்வமாக இது குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை என்றாலும், இதுவரை கிடைத்த தகவலின்படி, ரூ.10 லட்சம் வருமானத்திற்கு குறைவானவர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும் என்ற விதி அமல் படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மானியத்தின் பலன் கிடைக்கும்.
மானியத்திற்காக அரசாங்கம் இவ்வளவு செலவு செய்கிறது.
ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்
நேரிடையாக, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தும் DBT திட்டம், 2015, ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டருக்கான முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மானியப் பணம் அரசாங்கத்தின் சார்பாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும்.
ALSO READ | LPG Booking: சிலிண்டரை புக் செய்யும் ஸ்மார்ட்டான வழிகள்
மானியம் இல்லாத 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.15 அதிகரித்துள்ளது. முன்னதாக எண்ணெய் நிறுவனங்கள், 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.43.50 உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR