ஏப்ரல் மாத ராசிபலன்: கிரகங்களின் மாற்றத்தால் யாருக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து?

Monthly Horoscope: ஏப்ரல் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2022, 06:27 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை மற்றும் விரக்தி உணர்வுகள் மனதில் இருக்கலாம்.
  • மனதில் ஏமாற்றம் ஏற்படலாம்.
  • அனைத்து வேளையிலும் நிதானமாக இருங்கள்.
ஏப்ரல் மாத ராசிபலன்: கிரகங்களின் மாற்றத்தால் யாருக்கு ஆதாயம், யாருக்கு ஆபத்து? title=

ஏப்ரல் மாதத்தில் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படப் போகிறது. கிரக-நட்சத்திரங்களின் மாற்றம் மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 12 ராசிகளிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. ஏப்ரல் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுபமாகவும் எந்த ராசிக்காரர்களுக்கு அசுபமாகவும் இருக்கவுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

மேஷம் - மேஷ ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை மற்றும் விரக்தி உணர்வுகள் மனதில் இருக்கலாம். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். வாழ்கையில் சில வேதனையான தருணங்கள் வரலாம். செலவுகள் அதிகமாக இருக்கும்.

ரிஷபம் - மனதில் ஏமாற்றம் ஏற்படலாம். அனைத்து வேளையிலும் நிதானமாக இருங்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். சுவையான உணவில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம் - தேவையற்ற கோபம் மற்றும் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நண்பரின் உதவியால் வருமானம் ஈட்டலாம். குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் வசதிகளை கவனித்துக் கொள்ளுங்கள்.

கடகம் - மனம் அமைதியற்று இருக்கும். பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் மாற்றம் ஏற்படலாம். வருமானம் அதிகரிக்கும்.

சிம்மம் - மன அமைதி ஏற்படும். பொறுமை குறையும். மனம் கலங்கலாம். பணியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி - பொறுமையாக இருங்கள். தாயின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தை மேம்படுத்த தந்தையிடமிருந்து பணம் கிடைக்கும். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் குரு: ஏப்ரல் முதல் இந்த ராசிகளுக்கு ஒவ்வொரு நாளும் வரப்பிரசாதம்தான் 

துலாம் - துலா ராசிக்காரர்களுக்கு மனரீதியான பிரச்சனைகள் ஏற்படும். வாழ்வது வேதனையாக இருக்கலாம். பணியிடத்தில் உழைப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம் - கலை அல்லது இசையில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு – உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சியை அடைவதற்கான பல வழிகள் திறக்கும். வருமானம் அதிகரிக்கும். தாயின் ஆதரவும் அன்பும் அதிகமாக கிடைக்கும். 

மகரம் - மனதில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். பொறுமையாக இருங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம். சில கூடுதல் பொறுப்புகள் கிடைக்கக்கூடும். 

கும்பம் - மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். உத்தியோகஸ்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் உழைப்பும் அதிகமாக இருக்கும்.

மீனம் - மீன ராசிக்கார்ரகள் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். அதிகப்படியான கோபத்தையும் ஆர்வத்தையும் தவிர்க்கவும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் திரும்ப வரும்.  வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | கிரகநிலைகளில் பெரும் மாற்றம்; எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News