புதுடெல்லி: பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி. எபிஸ்கேஷ் லிமிடெட் (Ebixcash Ltd.), இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) ஆரம்ப பொது வழங்கலுக்கான (ஐபிஓ) ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் ரூ.6,000 கோடி திரட்ட நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இந்த நிறுவனம் அமெரிக்க சந்தையில் நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்ட எபிக்ஸ் இன்க் (Ebixcash Inc) இன் இந்திய யூனிட் ஆகும்.
ஒஃபெஸ்-ஐ கொண்டு வரும் எண்ணம் இல்லை
எபிக்ஸ்கேஷ் சமர்ப்பித்த ஆவணங்களின்படி, நிறுவனம் புதிய பங்குகளை வெளியிட்டு இந்தத் தொகையை திரட்டும். நிறுவனம் விற்பனைக்கான சலுகையை (ஒஎஃப்எஸ்) கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை. இது தவிர, நிறுவனம் ரூ.1,200 கோடிக்கான ஐபிஓ-க்கு முந்தைய திட்டம் குறித்தும் பரிசீலிக்கக்கூடும். இப்படி நடந்தால் வெளியீட்டின் அளவு குறைக்கப்படும்.
மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால் தாமதமாகிறதா வெளியீடு?
நிறுவனம் செயல்பாட்டு மூலதனத்தை அதிகரிக்கும்
ஐபிஓ மூலம் கிடைக்கும் வருமானம், அதன் துணை நிறுவனங்களான எபிக்ஸ் டிராவல்ஸ் மற்றும் எபிக்ஸ்கேஷ் நர்ல்ட் மணி ஆகியவற்றின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனத்தால் பயன்படுத்தப்படும்.
எல்ஐசியின் ஐபிஓ-வுக்கு சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபி அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான கண்காணிப்பு கடிதத்தை (அப்சர்வேஷன் லெட்டர்) செபி வெளியிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் ரூ.60,000 கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) மூலம் டிராஃப்ட் ரெட் ஹ்ர்ரிங் பிராஸ்பெக்டஸ் (டிஆர்எஹ்பி) தாக்கல் செய்யப்பட்ட பிறகு, எல்ஐசி ஐபிஓ-வுக்கான செபியின் ஒப்புதலும் வந்துவிட்டது. பொது வெளியீட்டின் ஆஃபரில் 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 10 சதவீதம் பாலிசிதாரர்களுக்கும், 5 சதவீதம் எல்ஐசி ஊழியர்களுக்கும் ஒதுக்கப்படும்.
ஆகையால் சில்லறை முதலீட்டாளர்கள் தவிர, ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களும் எல்ஐசி ஐபிஓ வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | LIC IPO: முதலீடு செய்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR