பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பட்ஜெட்டில் உள்ள இந்த அறிவிப்புகள் மூலம் பல தரப்பட்ட மக்களுக்கு ஏராளமான நிவாரணம் அளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் மற்றும் பெண்களுக்காக மகிளா சமன் சேமிப்புத் திட்டம் (Mahila Samman Savings Certificate) என்னும் புதிய சேமிப்பு திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டம் மார்ச் 2025 வரை இரண்டு ஆண்டுகள் நீடிக்கும். இதில் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டம் 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதன் கீழ், பெண்கள் சேமிப்பை ஊக்குவிக்க முடியும். இதனுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் நல்ல வட்டியும் வழங்கப்பட்டு வரிவிலக்கு பலனும் அளிக்கப்படுகிறது.
பட்ஜெட் 2023
இந்த முறை மோடி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த முறை பட்ஜெட்டில் பெண்களுக்காக பல சிறப்பு அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனுடன், பட்ஜெட்டில் பெண்களை சேமிக்க ஊக்குவிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Budget 2023-24 Live Updates: பட்ஜெட் உரை நிறைவு... முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
மகிளா சம்மான் சேமிப்புக் பத்திரம்
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது. இது ஒருமுறை முதலீடு செய்யும் சிறு சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் மார்ச் 2025 வரை இரண்டு ஆண்டுகளுக்கு தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், இரண்டு ஆண்டுகளுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் வசதியை, பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புதிய சேமிப்பு திட்டம்
மகிளா சம்மான் சேமிப்புக் திட்டத்தின் கீழ் 7.5 சதவீத வட்டி வழங்கப்படும். இதனுடன், இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வரி விலக்கு பலன் அளிக்கப்படும். இத்திட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு பெண் அல்லது சிறுமியின் பெயரில், இரண்டு லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இதனுடன், பகுதியளவு முதலீட்டை திரும்பப் பெறுவதற்கான விருப்பமும் உள்ளது.
மேலும் படிக்க | Budget 2023 Highlights: நிதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ