பெண்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் பலர் போராடி வரும் இதே உலகில் தான் வெறும் 500 ரூபாய் லாட்டரி-க்கு; கன்னி பெண்கள் பரிசாக அளிக்கப்படும் அவலமும் நிகழ்கிறது!
பிரேசில் நாட்டில் தான் இந்த அவலம் நிகழ்ந்து வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசிலின் என்ச்ரூலிசாடா பகுதியில் பிங்கோ (அ) குலுக்கல் லாட்டரியில் வெற்றி பெரும் நபருக்கு கன்னிப்பெண்ணை பரிசாக அளிக்கும் நடைமுறை உள்ளது என்றால் உங்கலாக் நம்ப முடிகிறதா...
சில தனியார் நிறுவனங்களின் சுய விளம்பரங்களுக்காக இந்த மனித நேயமற்ற செயல் நடைபெற்று வருகிறது என பிரபல ஆங்கில பத்திரிக்கை இதுகுறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. டேட்டிங் எனும் கலாச்சாரம் ஏற்கனவே இளைஞர்களை பாழாக்கியுள்ள நிலையில் தற்போது முகம் தெரியாத நபருடன் நொடியில் டேட்டிங் என்னும் இந்த நவீன கலாச்சாரம் படையெடுக்க தொடங்கியுள்ளது.
இந்த நகரில் உள்ள இளைஞர்கள் கன்னி பெண்களை வெல்வதற்காக, லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இளைஞர்கள் மட்டும் அல்ல, பல குழந்தைகளை பெற்ற குடும்பஸ்தர்களும் இந்த வரிசையில் நிற்கின்றனர்.
இந்த லாட்டரிகளின் குறைந்த பட்ச விலை இந்திய மதிப்பில் 500 ரூபாய் மட்டுமே,.. இந்த லாட்டரிகளின் விலையிலும் மாற்றம் உள்ளது. அதாவது குறிப்பிட்ட நகரங்களில் இருக்கும் பெண்களை பரிசாக பெறுவதற்கு ஏற்ப லாட்டரி டிக்கெட்டுகளின் விலையும் மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.