Imprisonment: குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30000 ஆண்டு சிறைதண்டனை!

உலகிலேயே அதிகபட்சமாக விதிக்கப்பட்ட சிறைதண்டனை எவ்வளவு தெரியுமா? 1,41,078 ஆண்டுகள்! அந்த குற்றவாளி செய்த கொடூர குற்றங்கள் என்ன?  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 31, 2021, 03:33 PM IST
  • குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30000 ஆண்டு சிறைதண்டனை!
  • பிரமிட் திட்டத்தில் 16,000 பேரை மோசடி செய்தவனுக்கு 1,41,078 ஆண்டுகள் தண்டனை!
  • கற்பழிப்பு குற்றவாளிக்கு 32,500 ஆண்டுகள் சிறை தண்டனை!
Imprisonment: குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 30000 ஆண்டு சிறைதண்டனை! title=

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது பழமொழி, ஆனால் அப்படி பல நாட்களாக செய்த குற்றங்கள் பிடிபட்டால் என்னவாகும்? சிறையிலேயே காலம் கழிக்க வேண்டியது தான். அதுவும், விதிக்கப்படும் சிறைதண்டனையை அனுபவிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது.

உலகிலேயே அதிகபட்சமாக விதிக்கப்பட்ட சிறைதண்டனை எவ்வளவு தெரியுமா? 1,41,078 ஆண்டுகள்! அந்த குற்றவாளி செய்த கொடூர குற்றங்கள் என்ன?  அவன் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தண்டனையை அனுபவித்து தீர்க்க முடியுமா?

உண்மையில் மிக நீண்ட கால தண்டனைகளை வழங்குவதன் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய உண்மை இருக்கிறது. குற்றத்தின் தீவிரத்திற்கு ஏற்ப தண்டனை வழங்கப்படவேண்டும் என்பது சட்டம். ஆனால் ஒரு கொலை செய்தவனுக்கும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை, மிகவும் கொடூரமாக பல கொலைகளை செய்தவனுக்கும் அதே தண்டனை என்பது பொருத்தமாக இருக்குமா?

மிகவும் நீண்ட தண்டனைகளை வழங்கும்போது, குற்றத்தின் தீவிரத் தன்மை வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது மன்னிக்க முடியாத குற்றம் என்பது மக்கள் மனதில் பதியும் என்பது தான் நீண்டகால தண்டனைகள் வழங்குவதற்கான காரணம்.

பல குற்றங்களைச் செய்த சில பிரபலக் குற்றவாளிகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான, ஆண்டுகள், சில நேரங்களில் லட்சக்கணக்கான ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட சிறைதண்டனையை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது தாய்லாந்து. தாய்லாந்தைச் சேர்ந்த சமோய் திப்யாசோ (Chamoy Thipyaso), உலகின் மிக நீண்ட சிறைத்தண்டனை பெற்றவர். பிரமிட் திட்டத்தில் 16,000 தாய்லாந்து நாட்டினரை ஏமாற்றிய 1,41,078 ஆண்டுகள் திப்யாசோவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பரிதாபம் என்ன தெரியுமா?

தாய்லாந்தில் மோசடி வழக்கில் குற்றவாளிக்கு எவ்வளவு காலம் தண்டனை வழங்கப்பட்டாலும், அவர்கள் 20 வருடங்களுக்கு மேல் சிறையில் இருக்க முடியாது என்று ஒரு சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் திப்யாசோ தனது முழு தண்டனையையும் அனுபவிக்காமல் விடுதலை ஆகிவிட்டார்.

Also Read | சேஸ் செய்து குற்றவாளியை பிடித்த Chennai Cop, viral ஆகும் real சிங்கம்!!

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 22 வயதான தபால்நிலைய ஊழியர் கேப்ரியல் மார்ச் கிரானடோஸ் (Gabriel March Granados) என்பவருக்கு 1972 ஆம் ஆண்டு 3,84,912 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள் மற்றும் பார்சல்களை வழங்காத குற்றத்துகாக இந்த தண்டனை வழங்கப்பட்டது. பின்னர் அவரது தண்டனை 14 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

கற்பழிப்பு குற்றவாளிக்கு (Rape accused) 32,500 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.1994 ஆம் ஆண்டில், ஆலன் வெய்ன் மெக்லாரின் என்பவருக்கு  மொத்தம் 21, 250 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 4 பலாத்கார வழக்குகளுக்காக, 8,000 ஆண்டுகள் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தி வன்புனர்வு செய்த 4 வழக்குகளுக்காக 8000 ஆண்டு சிறை தண்டனை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டபோது ஆயுத தாக்குதல்களுக்கு என்ற வகையில் மொத்தம்  8,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆலனின் கூட்டாளிக்கு மொத்தம் 11,250 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆலனுக்கும், அவரது கூட்டாளிக்கும் 32,500 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சார்லஸ் ஸ்காட் ராபின்சனுக்கு அமெரிக்காவில் 30,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஓக்லஹோமா நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்தது. 1994 முதல் சிறையில் உள்ள சார்லசுக்கு முதல் பரோல் எப்போது கிடைக்கும் தெரியுமா? 108 வயதாகும்போது தான், அவருக்கு முதல் பரோலைப் பெற தகுதி பெறுவார். 

அப்துல்கதிர் மஷரிபோவ் (Abdulkadir Masharipov) என்ற உஸ்பெக் நாட்டைச் சேர்ந்தவருக்கு 40 ஆயுள் தண்டனை மற்றும் கூடுதலாக 1,368 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2017 இல் இஸ்தான்புல் இரவு விடுதியில் தாக்குதல் நடத்தியதற்காக அப்துல்கதிருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

Also Read | Tokyo ஒலிம்பிக்ஸில் தீவிரவாதி தங்கப்பதக்கம் வென்றாரா? சர்ச்சை…

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News