7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய பரிசு... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம்

7th Pay Commission: ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வரும் எனவும் இந்த அறிவிப்பை கூடிய விரைவில் மோடி அரசாங்கம் வெளியிடக்கூடும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 13, 2023, 12:55 PM IST
  • ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சாத்தியம்.
  • ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2016 இல் அதிகரிக்கப்பட்டது.
  • சம்பள உயர்வு அதிகமாக இருக்கும்.
7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய பரிசு... அடிப்படை ஊதியத்தில் அதிரடி ஏற்றம் title=

7வது சம்பள கமிஷன், பணியாளர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர், சம்பள உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!! ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு பெரிய அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. அவர்களது ஊதியம் 3 மடங்கு வரை உயர்த்தப்படலாம் என கூறப்படுகின்றது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் எனவும் இந்த அறிவிப்பை கூடிய விரைவில் மோடி அரசாங்கம் வெளியிடக்கூடும் எனவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான சில முக்கிய தகவல்கள் தேர்தலுக்கு முன் வெளியாகலாம் என நம்பப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும் எனவும் அதனால் ஊழியர்களின் சம்பளமும் அதிகரிக்கும் என்றும் ஊழியர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். 

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு சாத்தியம்

ஏழாவது ஊதிய குழுவின் படி ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அதிக அளவிலான சம்பள உயர்வு கிடைக்கும் என கருதப்படுகின்றது. ஜூலை முதல் அடிப்படை சம்பள உயர்வின் பலன் ஊழியர்களுக்கு கிடைக்கும். ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்துவதற்கான பணிகளை அரசாங்கம் எடுக்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் இவர்களின் குறைந்தபட்ச சம்பள உயர்வை விரைவில் காணலாம்.

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2016 இல் அதிகரிக்கப்பட்டது

2016 ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழு அரசால் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழாவது ஊதியக்குழுவின் கீழ் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு அவர்களது குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு காணப்பட்டது. அடிப்படை குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணியாளர் மூன்று மடங்கு வரை ஊதிய உயர்வு பெறலாம் என நம்பப்படுகின்றது.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு அடிச்சது டபுள் ஜாக்பாட்.. பம்பர் சம்பளம் உயர்வு

சம்பள உயர்வு அதிகமாக இருக்கும்

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 3 மடங்கு உயர்த்தப்பட்டால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் ரூ.26,000 வரை அதிகரிக்கலாம். ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால், சம்பள உயர்வுடன், அகவிலைப்படி, பயணப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட அடிப்படை சம்பள உயர்வுகளும் பதிவு செய்யப்படும்.

அகவிலைப்படி உயர்வு விரைவில்

ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் ஊழியர்களின் அகவிலைப்படியை 3 அல்லது 4 சதவிகிதம் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது. ஜூன் மாதத்துக்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் ஜூலை இறுதியில் வெளியிடப்பட்டன. அந்த தரவுகளின் கீழ், ஊழியர்களின் அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அரசாங்கம் 3 சதவீத அதிகரிப்பை இறுதி செய்யலாம் என ஒரு சாரார் கூறி வருகிறார்கள். இது நடந்தால், ஊழியர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்படும். எப்படி இருந்தாலும், 3 அல்லது 4 சதவிகித அதிகரிப்புக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு இருக்கும். அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 45 சதவிகிதமாகவும் 4 சதவிகிதம் அதிகரித்தால் 46 சதவிகிதமாகவும் அதிகரிக்கும். 

தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண (டிஆர்) விகிதங்கள் தொழிலாளர் அமைச்சகத்தின் ஒரு பிரிவான தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission அடி தூள்: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட்.. இதுவும் அதிகரிக்குமாம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News