கொரோனா முழு அடைப்பால் சுத்தமானது பெங்களூரின் நீர்நிலைகள்...

பெங்களூரின் நீர்நிலைகள் மாசுபடுவதற்கு பெயர் பெற்றவை, பெல்லந்தூர் மற்றும் வர்தூர் போன்ற சில ஏரிகள் அவற்றின் மேற்பரப்பில் நுரை மற்றும் தீப்பிழம்புகளைக் கூட கண்டுள்ளன. விருஷபவதி என்பது நகரின் புறநகரில் உள்ள ஒரு நதி, இது பொதுவாக கருப்பு மற்றும் அசுத்தமாக ஓடுகிறது. 

Last Updated : Apr 16, 2020, 01:01 PM IST
கொரோனா முழு அடைப்பால் சுத்தமானது பெங்களூரின் நீர்நிலைகள்... title=

பெங்களூரின் நீர்நிலைகள் மாசுபடுவதற்கு பெயர் பெற்றவை, பெல்லந்தூர் மற்றும் வர்தூர் போன்ற சில ஏரிகள் அவற்றின் மேற்பரப்பில் நுரை மற்றும் தீப்பிழம்புகளைக் கூட கண்டுள்ளன. விருஷபவதி என்பது நகரின் புறநகரில் உள்ள ஒரு நதி, இது பொதுவாக கருப்பு மற்றும் அசுத்தமாக ஓடுகிறது. 

ஆனால் கொரோனா முழு அடைப்பின் இந்த நாட்களில் இந்த நதிகள் மற்றும் நீர் நிலைகள் தெளிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு மூன்று வாரங்களுக்கும் மேலாக நாடு தழுவிய முழ அடைப்பு நடைமுறையில் உள்ளது, இந்நிலையில் மக்கள் நடமாட்டம் குறைந்து இயற்கை வளங்கள் மீண்டும் தங்களை உயிர்பித்துக்கொண்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் ஆதரவு குழுவின் லியோ சல்தான்ஹா இதுகுறித்து தெரிவிக்கையில்., "நமது பெரும்பாலான நதிகள், ஆறுகள், ஏரிகள் சுத்தமாக ஓடிக்கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது இப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் நாளைய பற்றி ஒரு சிந்தனையும் இல்லாமல் மக்கள் தொழில்துறை கழிவுகளையும் கழிவுநீரையும் அங்கேயே கொட்டுகின்றனர்... இந்த உலகளாவிய தொற்றுநோயால் தற்போது நாம் அவதிப்பட்டு வருகிறோம்... இதன் காரணமாக கழிவுகளை கொட்டுவதை மக்கள் குறைத்துள்ளனர்", மற்றும் நீர் நிலைகளும் உயிர்பித்துள்ளன.

முழு அடைப்பில் உள்ள இந்த நேரத்தில் நீர் நிச்சயமாக மாசுபடுத்தல்களுக்கு சோதிக்கப்படவில்லை, மேலும் தூய்மையின் தோற்றமே உற்சாகத்தைத் தருகிறது. ஆனால் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்டவர்கள் நிச்சயமாக இந்த மாசுபடுத்திகளை நிறுத்த வேண்டும் என்று நம்புகிறார்கள். இது மற்ற நேரங்களில் நடக்காது என்பது ஒழுங்குமுறை தோல்விகள், ஊழல் காரணமாகும்" என்று கூறினார்.

மேலும், "இதைச் சமாளிப்பது பிரதமரின் முழு அடைப்பால் மட்டும் நடக்காது... மூன்று வாரங்கள் நாடு முழு அடைப்பில் உள்ள நிலையில் நீர்நிலைகள் இப்போது சுத்தமாக இருக்கிறது" என்றும் அவர் மேலும் கூறினார்.

பூட்டுதல் நீக்கப்பட்டு சாதாரண வாழ்க்கை மீண்டும் தொடங்கிய பின்னரும் பெங்களூரு மக்கள் நகரங்களின் விலைமதிப்பற்ற நீர்நிலைகளை இவ்வாறு காக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News